கமல் மகளுக்கு அம்மாவாகும் வயசா நயன்தாராவுக்கு?

By Siva

Recommended Video

நடிகை நிவேதா தாமஸுக்கு அம்மாவாக நடிக்கும் நயன்தாரா- வீடியோ

சென்னை: கமல் ஹாஸன் மகளுக்கு அம்மாவாக நடிக்கும் அளவுக்கு நயன்தாராவுக்கு வயதாகிவிடவில்லை.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார். படப்பிடிப்பு வரும் 10ம் தேதி துவங்க உள்ளது.

இந்நிலையில் படம் பற்றி புது தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ரஜினி

ரஜினி

பாபநாசம் படத்தில் கமல் ஹாஸனின் மகளாக நடித்த நிவேதா தாமஸ் முருகதாஸ் படத்தில் ரஜினிக்கு மகளாக நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நிவேதா ரஜினி மகளாக நடிப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை.

 நயன்தாரா

நயன்தாரா

34 வயதாகும் நயன்தாரா 23 வயது நிவேதா தாமஸுக்கு அம்மாவாக நடிக்க எப்படி ஒப்புக் கொண்டார் என்ற கேள்வி எழுந்துள்ளது. விஸ்வாசம் படத்தில் அவர் அனிகாவுக்கு அம்மாவாக நடித்தது சரி. ஆனால் நிவேதாவுக்கு அம்மாவாக நடிக்கும் அளவுக்கு நயனுக்கு வயதாகிவிடவில்லையே.

ஹீரோ

ஹீரோ

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடித்து வந்த நயன்தாரா தனது கொள்கையை தளர்த்தி பெரிய ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் தன்னை விட 11 வயதே சிறியவருக்கு அம்மாவாக நடிக்க ஒப்புக் கொண்டதற்கான காரணம் தெரியவில்லை.

 முருகதாஸ்

முருகதாஸ்

ரஜினி படத்தில் ஒரு காட்சியில் வந்தால் கூட போதும் என்று சில முன்னணி நடிகைகள் விரும்பி நடிக்கிறார்கள். அதே காரணத்திற்காக தான் நயன்தாரா இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக் கொண்டாரா?. யார் ஹீரோவாக இருந்தாலும் தனது கதாபாத்திரம் வெயிட்டாக இருக்க வேண்டும் என்று கூறும் ஆளாச்சே நயன். பிறகு இது எப்படி நடந்தது?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X