நயன்தாராவின் தந்தைக்கு தீவிர சிகிச்சை.. திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் தந்தையும் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியுமான குரியன் கொடியட்டுவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சமீபத்தில் தனது காதலர் மற்றும் இயக்குநரான விக்னேஷ் சிவன் உடன் தனி விமானத்தில் நயன்தாரா கொச்சிக்கு பறந்ததும் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வரும் தனது தந்தையை காணத்தான் என தகவல்கள் வெளியாகின.

அப்பாவின் ஆசை காரணமாக விரைவிலேயே விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொள்ள நடிகை நயன்தாரா சம்மதம் தெரிவித்தார் என்றும் கூறப்பட்டது.

நயன்தாரா அப்பா

நயன்தாரா அப்பா

நடிகை நயன்தாராவின் தந்தை குரியன் கொடியட்டு இந்திய விமானப்படையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். நயன்தாராவின் நிஜப் பெயர் டயானா மரியம் குரியன் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். நயன்தாராவின் அம்மா ஓமன குரியன் உடன் கேரளாவில் வசித்து வருகிறார் தந்தை குரியன்.

தீவிர சிகிச்சை

தீவிர சிகிச்சை

கடந்த சில மாதங்களாகவே நடிகை நயன்தாராவின் அப்பாவுக்கு உடல் நலன் சீராக இல்லை என தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருந்தது. இந்நிலையில், திடீரென உடல்நலன் மிகவும் மோசமடைந்ததால் கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அப்பாவுக்காக சம்மதம்

அப்பாவுக்காக சம்மதம்

தனது மகளின் திருமணத்தை கண் குளிர காணவேண்டும் என்கிற அப்பாவின் ஆசையை விரைவில் நிறைவேற்றுவதாக நடிகை நயன்தாரா சமீபத்தில் தனது தந்தையிடம் வாக்குக் கொடுத்ததாக தகவல்கள் வெளியாகின. கூடிய விரைவிலேயே நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

படங்களில் பிசி

படங்களில் பிசி

நெற்றிக்கண், அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல், பாட்டு என வரிசையாக ஏகப்பட்ட படங்களில் பிசியாகி உள்ள லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா அடுத்ததாக எலி பட இயக்குநருடன் ஒரு படம், ஷாருக்கான் உடன் பாலிவுட் படம் என படு பிசியாக இருந்து வருகிறார். இதற்கிடையே தனது தந்தையின் ஆசையையும் அவர் நிறைவேற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரசிகர்கள் பிரார்த்தனை

ரசிகர்கள் பிரார்த்தனை

நடிகை நயன்தாராவுக்கு தென்னிந்தியா முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். நடிகை நயன்தாராவின் தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அறிந்த ஏகப்பட்ட ரசிகர்கள் விரைவில் அவர் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X