»   »  நயன்தாராவின் ‘நைட் ஷோ’ பேய் படம் மாயா வாக மாற்றம்?

நயன்தாராவின் ‘நைட் ஷோ’ பேய் படம் மாயா வாக மாற்றம்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

பேய் படத்தில் நடிக்கிறார் நயன்தாரா என்பது அனைவருக்கும் தெரிந்த செய்திதான். நைட் ஷோ என்ற அந்த படத்தின் தலைப்பு மாயா என்று மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எல்லாம் வரிவிலக்கு பெறத்தானாம்.

நயன்தாரா தற்போது சூர்யாவுடன் சேர்ந்து மாஸ் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஒப்பந்தமாவதற்கு முன்பே ‘நெடுஞ்சாலை' படத்தின் நாயகன் ஆரிக்கு ஜோடியாக பேய் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார்.

புதுமுக இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கும் இதில், ‘சுட்டகதை', ‘கௌரவம்' ஆகிய படங்களில் நடித்த லட்சுமி பிரியாவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

நைட் ஷோ

நைட் ஷோ

நயன்தாரா படத்திற்கு ‘நைட் ஷோ' என்ற தலைப்பு வைத்திருந்தனர். ஆனால் இந்த தலைப்பு நயன்தாராவிற்கு நெருடலை ஏற்படுத்தியதாம்.

தலைப்பை மாத்து

தலைப்பை மாத்து

இந்த படத்தை அந்த மாதிரி படம் என்று மக்கள் தவறாக புரிந்துகொள்வார்கள். அதனால், படத்தின் தலைப்பை மாற்றி வைக்கும்படி படக்குழுவினரிடம் நயன்தாரா கூறினாராம்.

தமிழ் தலைப்பு

தமிழ் தலைப்பு

இதையடுத்து தற்போது, இந்த படத்திற்கு ‘மாயா' என்று தலைப்பை மாற்றி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் இன்னொரு விசயமும் இருக்கிறது. அதாவது, நைட் ஷோ என்று இங்கிலீஸ் தலைப்பு வைத்தால் வரிவிலக்கு கிடைக்காது என்பதால் படத்தலைப்பினை மாற்றிவிட்டனராம்.

நயன்தாரா யார்?

நயன்தாரா யார்?

படம் குறித்து தயாரிப்பாளர் கூறும்போது, ‘மாயா' படத்தின் கதை மூன்றுவிதமாக இருந்தாலும், நயன்தாரா ஒரெயோரு கேரக்டரில்தான் நடிக்கிறாராம்.

இது வித்தியாசமான பேய்

இது வித்தியாசமான பேய்

இப்படத்தை பொட்டான்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் பிரபு மற்றும் பிரகாஷ் பாபு ஆகியோர் தயாரித்து வருகின்றனர். தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. மற்ற பேய் படங்களுக்கும், இந்த படத்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது என்கிறார் படத்தின் இயக்குநர்.

English summary
Nayanthara has been busy shooting for her horror-thriller Night Show along with the lead actor Aadhi. The shoot has now been wrapped up. Now we hear that the title of the film might undergo a change. The reason, we hear is that the film might not be eligible for tax exemption with an English title. Nayanthara plays a character called Maya in the film and the title might hence, be Maya. The film is directed by debutante Ashwin Saravanan. However, there has been no official confirmation on the same.
Please Wait while comments are loading...