Don't Miss!
- News
லகானை பிடித்த அன்பில் மகேஷ்.. "ஒருவன் ஒருவன் முதலாளி".. குதிரை வண்டியில் ஏறி சீறிப்பாய்ந்த அமைச்சர்!
- Finance
மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு ரொம்ப நன்றி.. 21 வருடமாக பணி புரிந்த ஊழியர் நெகிழ்ச்சி.. !
- Sports
இந்தியா, ஆஸிக்கு காத்திருக்கும் ஆபத்து.. முதல் டெஸ்ட் மைதானத்தில் நடந்த போட்டி என்ன ஆச்சுனு பாருங்க
- Automobiles
இதுல ஒன்னு கைகளுக்கு வந்தாலும் வேற லெவல்ல சீன் போடலாம்.. 2023 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சி தந்த டாப் எஸ்யூவி கார்!
- Lifestyle
வாஸ்துப்படி, டிவி, ஃபிரிட்ஜ், சோபா-வை வீட்டின் எந்த திசையில் வைக்க வேண்டும் தெரியுமா?
- Technology
ரூ.10,000 பாஸ்.. தள்ளுபடியில் தத்தளிக்கும் MacBook, ஏர்பாட்ஸ் ப்ரோ! கெத்து காட்ட நேரம் வந்துருச்சு!
- Travel
பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்துக் கொள்ள இப்போதே டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
- Education
Micro Job Fair in Namakkal 2023: நாமக்கலில் நாளை வேலைவாய்ப்பு முகாம்...!
மீண்டும் ஹாரர் படத்தில் நயன்தாரா.. ட்ரெயிலர் எப்போ ரிலீஸ் தெரியுமா?
சென்னை : நடிகை நயன்தாரா நடிப்பில் அடுத்தடுத்து வெற்றி படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
தென்னிந்திய மொழி படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வந்த நயன்தாரா தற்போது அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் படத்தில் நடித்து வருகிறார்.
இதன் மூலம் பாலிவுட்டிலும் நயன்தாரா என்ட்ரி கொடுத்துள்ளார். அடுத்த ஆண்டில் இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அப்பவே
செம
க்யூட்..
சின்ன
வயசுல
நயன்தாரா
எப்படி
இருக்காருன்னு
பாருங்க..
அரிய
பள்ளிப்பருவ
புகைப்படம்!

நடிகை நயன்தாரா
நடிகை நயன்தாரா கோலிவுட் முதல் டோலிவுட் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துள்ளார். .விஜய், அஜித், ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் கோலிவுட்டில் இவர் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இந்த படங்கள் அனைத்தும் வெற்றி படங்களாகவே அமைந்துள்ளன. இதன்மூலம் இவர் கோலிவுட்டின் லேடி சூப்பர்ஸ்டாராகவே கொண்டாடப்படுகிறார்.

வரவேற்பை பெற்ற மாயா படம்
முன்னணி நடிகர்களுடன் ஒரு புறம் நடித்து வந்தாலும் தன்னுடைய கேரக்டருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல படங்களில் நயன்தாரா நடித்த வருகிறார். ஹாரர் படங்களும் இவரது ஃபேவரட் லிஸ்டில் உள்ளன. அந்த வகையில் சில வருடங்களுக்கு முன்பு இவர் நடித்த மாயா படம் இவருக்கு சிறப்பாக கை கொடுத்தது. ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கும் உள்ளானது.

கனேக்ட் படத்தில் நயன்தாரா
அந்த வகையில் நயன்தாரா தற்போது கனெக்ட் என்ற படத்தில் நடித்துள்ளார் இந்த படத்தை இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சத்யராஜ், அனுபம் கெர், வினய் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்தை நயன்தாரா - விக்னேஷ் சிவன் தங்களது சொந்த தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் மூலம் தயாரித்துள்ளனர்

ஹாரர் சஸ்பென்ஸ் த்ரில்லர்
ஹாரர் சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தை வரும் டிசம்பர் 22ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய நயன்தாரா திட்டமிட்டுள்ளார். படத்தின் ரன் டைம் 95 நிமிடங்கள் எனவும் இந்த படத்தில் இடைவேளை இல்லை என்றும் பட குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரவேற்பை பெற்ற டீசர்
இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மிகச்சிறந்த வரவேற்பு பெற்றது. இதனிடையே படத்தின் புதிய அப்டேட்டாக இந்த படத்தின் டிரைலர் வரும் டிசம்பர் ஒன்பதாம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகும் என்று பட குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டீசரே மிரட்டிய நிலையில், ட்ரெயிலருக்காக ரசிகர்கள் வெயிட்டிங்.

மீண்டும் ஹாரர் படம்
நயன்தாரா நடிப்பில் மாயா படம் வெளியாகி ஒவ்வொரு காட்சிகளும் ரசிகர்களால் மிகவும் விரும்பப்பட்டன. அந்த வகையில் கனெக்ட் படத்தின் டீசர் ரசிகர்களின் விருப்பத்திற்குரியதாக அமைந்துள்ளன. இந்த படம் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய பட்டியலில் இடம்பெற்றுள்ளது. படம் வெளியாக இன்னும் சில தினங்கள் உள்ள நிலையில் படம் ரசிகர்களை எந்த அளவுக்கு கவரும் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.