நயன்தாரா நடிப்பில் ராக்கி படத்தில் இடம்பெறும் காலம் ஒரு துரோகி.. பாடல் ப்ரோமோ ரிலீஸ் தேதி வெளியானது!

சென்னை: தரமணி திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்த வசந்த் ரவி இப்பொழுது கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ராக்கி

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

கேங்ஸ்டர் கதை களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை விக்னேஷ் சிவன், நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள காலம் ஒரு துரோகி பாடல் ப்ரோமோ ரிலீஸ் அப்டேட் வெளியானது.

மிரட்டும் கேங்ஸ்டர் கதைக்களத்தில்

மிரட்டும் கேங்ஸ்டர் கதைக்களத்தில்

இயக்குனர் ராமின் இயக்கத்தில் வித்தியாசமான கதைக்களத்தில் வெளியான தரமணி திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வசந்த் ரவி. முதல் படத்திலேயே மிகச் சிறந்த நடிகர் என்ற பாராட்டுக்களை பெற்ற இவர் இப்பொழுது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் ராக்கி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். மிரட்டும் கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாக்கியுள்ள இந்த திரைப்படம் சென்ற ஆண்டே ஓடிடி ரிலீஸுக்கு தயாராக இருந்தது என கூறப்பட்டது. இப்போது நேரடியாக திரையரங்குகளில் மட்டும் வெளியாக தயாராக உள்ளது..

பாரதிராஜா முக்கிய வேடத்தில் கேங்ஸ்டர் டானாக

பாரதிராஜா முக்கிய வேடத்தில் கேங்ஸ்டர் டானாக

விக்னேஷ் சிவன் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்க இயக்குனர் இமயம் பாரதிராஜா முக்கிய வேடத்தில் கேங்ஸ்டர் டானாக நடித்துள்ளார். ராக்கி டீஸரிலேயே ரத்தம் தெறிக்க பல காட்சிகள் இடம் பெற்றிருக்க பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த திரைப்படம் டிசம்பர் 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

ரவுடிஸத்தை மையமாக வைத்து

ரவுடிஸத்தை மையமாக வைத்து

மேலும் இந்த படத்தில் ரவீனா ரவி, ரோகிணி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். என்னை நோக்கி பாயும் தோட்டா படத்திற்கு இசையமைத்த டார்புக்கா சிவா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ரவுடிஸத்தை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது

Recommended Video

Rocky படத்தை வாங்க போட்டிபோட்ட Thalapathy Director | Vasanth Ravi Exclusive | Filmibeat Tamil
நயன்தாராவின் நடிப்பில் காலம் ஒரு துரோகி பாடல் ப்ரோமோ

நயன்தாராவின் நடிப்பில் காலம் ஒரு துரோகி பாடல் ப்ரோமோ

சமீபத்தில் ராக்கி டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தில் நயன்தாராவின் நடிப்பில் காலம் ஒரு துரோகி என்ற பாடல் உருவாகியுள்ளது. நயன்தாரா சிறப்புத் தோற்றத்தில் ஒரே ஒரு பாடலில் மட்டும் தோன்றும் காலம் ஒரு துரோகி பாடலின் ப்ரோமோ இன்று வெளியாகிறது என புதிய போஸ்டரை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. நயன்தாரா நானும் ரவுடிதான் படத்திற்கு பிறகு இப்பொழுது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் விஜய்சேதுபதி,சமந்தாவுடன் இணைந்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X