குளித்துக் கொண்டே முத்தம் கொடுக்கும் நயன்.. யாருக்குனு தெரிஞ்சா காண்டாயிடுவீங்க ரசிகாஸ்!
நடிகை நயன்தாரா சூரியனுக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படம் வைரலாகியுள்ளது.
சென்னை: நடிகை நயன்தாரா குளிக்கும் தொட்டிக்குள் அமர்ந்தபடி முத்தம் கொடுக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
தமிழில் லேடி சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வருபவர் நடிகை நயன்தாரா. ரஜினி, விஜய் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வரும் இவர், கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நடித்து வருகிறார்.
சினிமாவில் பிசியாக இருந்தாலும், தன் காதலுக்கும், காதலருக்கும் நேரம் ஒதுக்கத் தவறுவதில்லை நயன். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் காதலர் விக்னேஷ் சிவனுடன் வெளிநாடு பறந்து விடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

கிரீஸில் சுற்றுலா
அந்தவகையில், தற்போது இந்தக் காதல் ஜோடி கிரீஸ் நகரத்திற்கு சென்றுள்ளது. தேனிலவு செல்லும் தம்பதிகளின் விருப்ப நாடுகளில் ஒன்றான இங்கு, ஜோடியாக தாங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை அவ்வப்போது சமூகவலைதளங்களில் பதிவேற்றி வருகின்றனர்.

வைரல் போட்டோ
ஏற்கனவே, நயன்தாரா வெள்ளை உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலானது. ஒரு கண்ணாடி அறைக்குள் நயன்தாரா நிற்பது போன்றும், கண்ணாடிக்கு வெளியே விக்னேஷ் சிவன் நின்று செல்போனில் புகைப்படம் எடுப்பது போன்றும் அழகாக எடுக்கப் பட்டிருந்தது அந்தப் புகைப்படம்.
மற்றொரு புகைப்படம்
இந்நிலையில் நயனின் மற்றொரு புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகியுள்ளது. அதில் குளியல் தொட்டி ஒன்றில் படுத்தபடி, சூரியனுக்கு முத்தம் கொடுக்கிறார் நயன். இந்த படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

‘அடுத்தடுத்த படங்கள்
சிவகார்த்திக்கேயன் ஜோடியாக நயன் நடித்த மிஸ்டர் லோக்கல் படம் எதிர்பாராத தோல்வியைத் தழுவியது. அதற்கு முன்னர் வெளியான ஐரா படமும் நயனுக்கு வெற்றிப்படமாக அமையவில்லை. கடந்த வாரம் ரிலீசாக இருந்த கொலையுதிர் காலம் படமும் சில பிரச்சினைகளால் தள்ளிப்போய்விட்டது.


Click it and Unblock the Notifications











