»   »  பாவாடை சட்டையில் நயன்தாரா.. கோலமாவு கோகிலா மோஷன் போஸ்டர் ரிலீஸ்!

பாவாடை சட்டையில் நயன்தாரா.. கோலமாவு கோகிலா மோஷன் போஸ்டர் ரிலீஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
பாவாடை சட்டையில் நயன் - கோலமாவு கோகிலா- வீடியோ

சென்னை : நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்துவரும் படம் 'கோலமாவு கோகிலா'. லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து சரண்யா பொன்வண்ணன், யோகி பாபு, விஜய் டிவி ஜாக்குலின், அறந்தாங்கி நிஷா ஆகிய பலர் நடித்து வருகின்றனர்.

Nayanthara's kolamavu kokila motion poster

இந்த நிலையில், கோலமாவு கோகிலா படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் டீசர் வெளியாகியுள்ளது. மார்ச் 8-ம் தேதி முதல் சிங்கிள் ட்ராக் பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அதர்வாவுடன் இணைந்து நயன்தாரா நடித்துவரும் 'இமைக்கா நொடிகள்' படத்தின் விளம்பர இடைவேளை என்ற பாடலும் நேற்று இரவு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
'Kolamavu Kokila' is a movi lead by Lady Superstar Nayanthara directed by Nelson Dilip Kumar. Anirudh has composed the music for this film. 'Kolamavu Kokila' Motion Poster and First Single Teaser was released.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil