நயன்தாராவிற்கு இப்படியொரு ஆசையா? அதனால் தான் அந்த கதையை ஓகே சொன்னாரா? பரபரக்கும் தகவல்!

சென்னை: இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநர்கள் பலர் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களாக மாறி உள்ளனர்.

அந்த வரிசையில் அடுத்ததாக இணைய காத்திருக்கிறார் நிலேஷ் கிருஷ்ணா. அவரது அந்த பிரம்மாண்டமான கதை பிடித்துப் போன நிலையில், தான் நயன்தாரா தனது 75வது படத்திற்கு அவரை இயக்குநராக ஒப்பந்தம் செய்துள்ளார்.

மாயா, அறம் படங்களை போல தனது 75வது படமும் ஒரு லேண்ட்மார்க் படமாக இருக்க வேண்டும் என நயன்தாரா முடிவு செய்துள்ள நிலையில், படத்தின் டைட்டில் மற்றும் கதை தொடர்பான தகவல்கள் கசிந்துள்ளன.

திருமணத்திற்கு பிறகும்

திருமணத்திற்கு பிறகும்

இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்த நிலையில் பல படங்களில் நடித்து வந்த நயன்தாரா திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து பல படங்களில் நடிக்க திட்டங்களை போட்டு வருகிறார். ஷாருக்கானின் பாலிவுட் படம் ஹிட் ஆனால், அங்கேயும் மிகப்பெரிய மார்க்கெட் அவருக்கு உதயமாகும். இந்நிலையில், தனது 75வது படத்தை இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநரை வைத்து இயக்க வைக்க வேண்டும் என அவர் செய்துள்ள முடிவை கோலிவுட்டில் பலரும் வரவேற்கின்றனர்.

எந்திரன் படத்தில்

எந்திரன் படத்தில்

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யாராய் நடித்த எந்திரன் படத்திலேயே ஷங்கருக்கு உதவி இயக்குநராக பணியாற்றியவர் நிலேஷ் கிருஷ்ணா. அவர் எழுதி வைத்திருக்கும் முதல் கதை மிகவும் பிரம்மாண்டமானதாகவும், ரசிகர்களையும் இல்லத்தரசிகளையும் கவரும் விதமாக இருக்கும் என்பதை அறிந்த உடனே அந்த கதையை ஓகே செய்திருக்கிறார் நடிகை நயன்தாரா. சமீப காலமாக அவர் சோலோ ஹீரோயினாக நடிக்கும் படங்கள் எல்லாம் ஃபிளாப் ஆகி வரும் சூழலில் ரியல் லேடி சூப்பர்ஸ்டார் என்பதை நிரூபிக்கும் விதத்தில் இந்த படத்தில் கமிட் ஆகி இருப்பதாக கூறுகின்றனர்.

என்ன கதை

என்ன கதை

ஒரு சாதாரண பெண் சமையல் செய்து மிகப்பெரிய ரெஸ்டரன்ட் சாம்ராஜ்யத்தையே உருவாக்குவதும் அவருக்கு வரும் எதிர்ப்புகளை எப்படி எதிர்கொள்கிறார் என்கிற கதையை திரைக்கதையாக அட்டகாசமாக எழுதி இருக்கிறாராம் இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணன். ஜெய், சத்யராஜ் உள்ளிட்ட நடிகர்கள் நடிக்க நயன்தாராவுக்கு எப்படி அட்லியின் ராஜா ராணி படம் ஒரு கம்பேக் ஆக அமைந்ததோ அதே போல இந்த படமும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதான் டைட்டிலா

இதுதான் டைட்டிலா

மேலும், நயன்தாராவின் 75வது படத்துக்கு அன்னபூரணி என்கிற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் தான் இந்த படத்தை முதலில் தயாரிக்க நினைத்ததாகவும், நயன்தாரா நடித்தால் நல்லா இருக்கும் என இயக்குநர் அடம் பிடித்த நிலையில், டிரைடண்ட் ஆர்ட்ஸ் உள்ளே நுழைந்து படத்தை ஜி ஸ்டூடியோஸ் உடன் இணைந்து பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளதாக கூறுகின்றனர். கூடிய விரைவிலேயே அதிகாரப்பூர்வ டைட்டில் மற்றும் நயன்தாராவின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended Video

Nayanthara Marriage-க்கு Cute-ஆ வந்து வாழ்த்திய Surya, Jyothika
ஏகே62 கதையும் இதுதானா

ஏகே62 கதையும் இதுதானா

நயன்தாராவுக்கு இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா சொன்ன கதையை அப்படியே அஜித்துக்காக லேசாக மாற்றி சொல்லி ஓகே செய்து விட்டாரா இயக்குநர் விக்னேஷ் சிவன் என்கிற கேள்வியும் தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஏனென்றால், அஜித்தின் ஏகே 62 படத்தின் கதையும் ஹோட்டல் மற்றும் டாப் செஃப் பற்றிய கதைதான் என்கிற தகவல்கள் வெளியான நிலையில், எங்கே கோல்மால் நடந்துள்ளது என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X