ஓடிடி.,யில் ரிலீாகும் நயன்தாராவின் புதிய படம்...அதிர்ச்சியில் திரையுலகம்

திருவனந்தபுரம் : கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்து வருவதால், மலையாள திரையுலகத்தில் தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட திட்டமிட்டிருந்த பல படங்களின் ரிலீஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. எதிர்பார்க்கப்படும் சில படங்கள், ஓடிடி தளங்களில் வெளியிடப்பட உள்ளன.

Recommended Video

OTT release Movies? Netrikann, Cobra, Jagame Thanthiram lined Up | Amazon, Hotstar

ஏற்கனவே தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்டு, வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த படங்களும், தியேட்டர்கள் மூடப்பட்டதால் தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்ட மிக குறுகிய காலத்திலேயே ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பரவலால் முன்னணி நடிகர்களின் படப்பிடிப்புக்களும் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.

ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்படும் படங்கள்

ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்படும் படங்கள்

மம்முட்டி நடித்த தி பிரிஸ்ட், ஒன் ஆகிய படங்கள் ஓடிடி.,யிலேயே ரிலீஸ் செய்யப்பட்டது. சமீபத்தில் குஞ்சாக்கோ போபன் நடித்த நயட்டு படம் நெட்பிளக்சிலும், துப்பறியும் திரில்லர் படமான ஆப்பரேஷன் ஜாவா படம் ஜீ 5 தளத்திலும் ரிலீஸ் செய்யப்பட்டன.

ஓடிடி.,க்கு வரும் நயன்தாரா படம்

ஓடிடி.,க்கு வரும் நயன்தாரா படம்

இந்நிலையில் லேட்டஸ்டாக நயன்தாரா - குஞ்சக்கோ போபன் நடித்துள்ள நிழல் படமும் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. சிம்ப்ளி சவுத் தளத்தில் மே 11 ம் தேதி இந்த படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. ஏப்ரல் 9 ம் தேதி தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்ட நிழல் படம், ஆரம்பம் முதல் நல்ல வரவேற்பை பெற்றது.

மாறுபட்ட வேடத்தில் நயன்தாரா

மாறுபட்ட வேடத்தில் நயன்தாரா

நிழல் படத்தில் குஞ்சக்கோ போபன், ஜான் பேபி என்ற நீதிபதி ரோலில் நடித்திருப்பார். இந்த படத்தில், ஒரு மாறுபட்ட வேடத்தில், ஒரு குழந்தையின் தாயாக நயன்தாரா நடித்திருப்பார். இவர்களுடன் இந்த படத்தில் சாய்ஜு குருப், த்வயபிரபா, ரோனி டேவிட் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

 விருதுபெற்ற எடிட்டர் படம்

விருதுபெற்ற எடிட்டர் படம்

மலையாளத்தில் விருது பெற்ற எடிட்டரான அப்பு என்.பத்தாத்ரி இந்த படத்தை இயக்கி, எடிட் செய்திருந்தார். இப்படத்தின் கதையை சஞ்சீவ் எழுதி இருந்தார். அன்டோ ஜோசப், அபிஜித் எம்.பிள்ளை, பாதுஷா, ஃபெல்லினி டிபி, ஜினேஷ் ஜோஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருந்த இந்த படத்திற்கு சூரஜ் எஸ்.கிருப் இசையமைத்திருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X