ஆஹா.. இது வேற லெவல் அழகா இருக்கே.. வைரலாகும் லேடி சூப்பர் ஸ்டாரின் செம ஸ்டைல் புகைப்படங்கள்!

By

சென்னை: நடிகை நயன்தாராவின் செம ஸ்டைலான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

நயன்தாரா நடித்திருந்த மூக்குத்தி அம்மன் படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் தீபாவளிக்கு ரிலீஸ் ஆனது.

இந்தப் படத்தில் ஆர்.ஜே.பாலாஜி, மவுலி, ஊர்வசி, அஜய் கோஷ் உட்பட பலர் நடித்துள்ளனர்

அம்மனாக நடித்தார்

அம்மனாக நடித்தார்

என்ஜே.சரவணனுடன் இணைந்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கியிருந்த இந்த படம், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் நயன்தாரா, மூக்குத்தி அம்மனாக நடித்திருந்தார். அம்மன் வேடத்துக்காக அவர் விரதம் இருந்து நடித்தார். இதில் அவர் நடிப்பு பேசப்பட்டது. அடுத்து, அவர் காதலர் விக்னேஷ் சிவன் தயாரித்துள்ள நெற்றிக்கண் படத்தில் நடித்துள்ளார்.

காத்து வாக்குல

காத்து வாக்குல

இந்தப் படத்தின் டீசர், கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்தப் படத்தை அடுத்து ரஜினிகாந்தின் அண்ணாத்த, விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடிக்க இருக்கிறார், நயன்தாரா.

த்ரில்லர் நிழல்

த்ரில்லர் நிழல்

இதற்கிடையே, மலையாளத்தில் உருவாகும் நிழல் என்ற த்ரில்லர் படத்தில் நடிக்கிறார், நயன்தாரா. இதில் குஞ்சாக்கோ போபன் ஹீரோ. அப்பு என் பட்டாத்திரி இயக்குகிறார். இதன் ஷூட்டிங் எர்ணாகுளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கியது. இதன் படப்பிடிப்பில், நயன்தாரா சமீபத்தில் இணைந்தார்.

வீட்டுக்கு விசிட்

வீட்டுக்கு விசிட்

குஞ்சாக்கோ போபனும் நயன்தாராவும் ஏற்கனவே டிவென்டி 20 படத்தில் சின்ன காட்சியில் நடித்திருந்தனர். 12 வருடங்களுக்குப் பிறகு இப்போது மீண்டும் சேர்ந்து நடிக்கின்றனர். இதன் ஷூட்டிங்கில் நயன்தாரா கலந்துகொண்ட புகைப்படங்கள் வைரலாகின. பின்னர் நயன்தாரா, குஞ்சாக்கோ போபன் வீட்டுக்கு திடீரென சென்றார்.

நிழல் புகைப்படம்

நிழல் புகைப்படம்

அங்கு குஞ்சாக்கோ போபன், அவர் மனைவி, குழந்தையுடன் நயன்தாரா எடுத்துக்கொண்ட போட்டோ வைரலானது. இந்நிலையில், 'நிழல்' படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்ற நயன்தாராவின் செம ஸ்டைல் லுக் புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ஹேர் ஸ்டைல் செம

ஹேர் ஸ்டைல் செம

இந்த புகைப்படங்கள், நயன்தாராவின் ரசிகர்கள் உருவாக்கியுள்ள இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியாகியுள்ளன. இதில் நயன்தாராவின் ஹேர்ஸ்டைல் செம அழகாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அவர் அழகை வர்ணித்து ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X