சிவகார்த்திக்கேயனுக்கு 9.. விக்னேஷ் சிவனுக்கு நயன் போட்ட மார்க் எவ்வளவு தெரியுமா?

நயன்தாரா நடித்துள்ள கோலமாவு கோகிலா திரைப்படம் இந்த வாரம் வெள்ளிக்கிழமை ரிலீசாகிறது.

Recommended Video

விக்னேஷ் சிவன், சிவகார்த்திகேயனுக்கு மார்க் போட்ட நயன்தாரா- வீடியோ

சென்னை: தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தன் மனம் கவர்ந்த இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு மதிப்பெண்கள் வழங்கி இருக்கிறார் நடிகை நயன்தாரா.

சமீபகாலமாக ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் நயன்தாரா. அவர் நடித்த அறம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து, அவர் கோலமாவு கோகிலா, இமைக்கா நோடிகள், அஜித்தின் விசுவாசம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இதில் கோலமாவு கோகிலா திரைப்படம் இந்த வாரம் வெள்ளிக்கிழமை ரிலீசாகிறது. இதையொட்டி படக்குழுவினர் பல்வேறு புரொமோஷன் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

தவிர்க்கும் நயன்தாரா

தவிர்க்கும் நயன்தாரா

ஆனால் அஜித் பாணியில் நயன்தாராவும் புரொமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை. குறிப்பாக பொதுவான பத்திரிகையாளர் சந்திப்புகளை அவர் தவிர்த்துவிடுவார். காரணம் படத்தை தாண்டி அவரது பர்சனல் வாழ்க்கை குறித்து கேள்விகள் எழுப்பக்கூடம் என்ற பயம் தான் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சி

சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சி

ஆனால் தனியார் தொலைக்காட்சிகளில் படக்குழுவுடன் இணைந்து புரொமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வார் நயன்தாரா. அந்த வகையில் வரும் சுதந்திர தினத்தன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கோலமாவு கோகிலா படக்குழுவினர் பங்கேற்கும் நிகழ்ச்சி ஒளிப்பரப்பாக உள்ளது.

நயன்தாரா போட்ட மார்க்

நயன்தாரா போட்ட மார்க்

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நயன்தாராவிடம், விக்னேஷ் சிவனுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் மார்க் போடும்படி தொகுப்பாளர் கேட்டார். அதற்கு பதிலளித்த நயன்தாரா, சிவகார்த்திகேயனுக்கு 10க்கு 9 மார்க்கும், விக்னேஷ் சிவனுக்கு 9.9 மார்க்கும் அளித்தார்.

மார்க்கை குறைத்தது ஏன்?

மார்க்கை குறைத்தது ஏன்?

ஆனால் இதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை. நயனும் விக்னேஷ் சிவனும் காதலித்து வருகின்றனர் என்பது ஊர் அறிந்த விஷயம் தான். அதேசமயம் விக்னேஷ் சிவனுக்கு 10க்கு 10 மார்க்கு கொடுக்காமல் அந்த புள்ளி 1 மார்கை ஏன் அவர் குறைத்தார் என்பது தான் விளங்கவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X