மூக்குத்தி அம்மன் படத்தை ஹிட்டாக்க ஆர்.ஜே.பாலாஜி எடுத்துள்ள முடிவால் பரபரப்பு
சென்னை : கொரோனா லாக்டவுன் சமயத்தில் நேரடியாக ஒடிடி.,யில் ரிலீஸ் செய்யப்பட்ட படங்களில் ஒன்று நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன். கடந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு, டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியிடப்பட்டது.
ஆர்ஜே பாலாஜியின் காமெடியான நடிப்பு, நயன்தாராவிற்கு மிக கச்சிதமாக பொருந்தும் வகையில் போடப்பட்ட மேக்அப் ஆகியன ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது. நயன்தாராவை முன்னிலைப்படுத்தி, நகைச்சுவை கலந்த குடும்ப கதையாக இப்படம் எடுக்கப்பட்டிருந்தது. அதே சமயம் போலி சாமியார்களை மூக்குத்தி அம்மன் அடையாளம்காட்டுவதாகவும் அமைந்திருந்தது.

இந்த படத்தை ஆர்ஜே பாலாஜி, என்.ஜெ.சரவணனுடன் இணைந்து இயக்கி இருந்தார். ஆர்ஜே பாலாஜி இயக்கிய முதல் படம் இதுவாகும். ஏப்ரல் 14 தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு காலை 11 மணிக்கு விஜய் டிவி.,யில் இந்த படம் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
ஆனால் அதிக அளவிலான பார்வையாளர்களை கவருவதற்காக, இந்த படத்தின் அன்சீன் காட்சிகளையும், பல்வேறு காரணங்களால் நீக்கப்பட்ட காட்சிகளையும் இணைத்து வெளியிட ஆர்.ஜே.பாலாஜி முடிவு செய்துள்ளார். சில மூட பழக்க வழக்கங்களை கண்டிப்பதாக இந்த காட்சிகள் அமைந்திருக்கும் என கூறப்படுகிறது.
சமூக வலைதளங்களிலும் இதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய வெளியீடு காட்சிகளால் ஓடிடி தளத்திலும் மீண்டும் மூக்குத்தி அம்மன் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என நம்பப்படுகிறது. ஆனால் இது சில விமர்சனங்களுக்கு ஆளாக நேரலாம் எனவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











