ஃபர்ஸ்ட் லுக்குன்னு சொன்னீங்க.. பாதி லுக் தான் இருக்கு.. ஆத்தா நயன்தாரா தரிசனம் கிடைச்சுடுச்சு!
சென்னை: அம்மனாக நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப் பட்டுள்ளது.
ஆர்.ஜே. பாலாஜி மற்றும் என்.ஜே. சரவணன் இயக்கத்தில் நயன்தாரா, ஆர்.ஜே. பாலாஜி, கெளதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
எல்.கே.ஜி. படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, வேல்ஸ் நிறுவனம் மற்றும் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் மூக்குத்தி அம்மன் படம் உருவாகி வருகிறது.
அம்மனாக நயன்
மூக்குத்தி அம்மன் என்ற டைட்டிலை பார்த்தவுடன் சாமி படமாக வருமா அல்லது லிட்டில் ஜான் படத்தை போல ஃபேண்டஸி படமாக வருமா என்ற சந்தேகம் எழுந்து வருகிறது. இந்நிலையில், தற்போது, வெளியாகி உள்ள ஃபர்ஸ்ட் லுக்கில், அம்மனாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார் என்பது தெளிவாகி உள்ளது.
கார்ஜியஸ் அம்மன்
நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் போஸ்டரை பார்த்த ரசிகர்கள், அல்டிமேட் கார்ஜியஸ் தெய்வீகமான லுக் என்றும், க்யூட் அம்மன் என்றும், தலைவி தரிசனம் கிடைச்சுடுச்சு என்றும் பாராட்டி வருகின்றனர். ஐசரி கணேஷ் தயாரிப்பில் உருவாகி உள்ள மூக்குத்தி அம்மன் திரைப்படம் மே மாதம் வெளியாகிறது.
ஆத்தா நயன்தாரா
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் இந்த அம்மன் கெட்டப்பை பார்த்த ரசிகர்கள், ஆத்தா நயன்தாரா தரிசனம் கிடைச்சுடுச்சு என கமெண்ட் செய்தும் #MookuthiAmmanFL என்ற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்தும் வருகின்றனர். ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் பழைய ராம நாராயணன் படம் மாதிரி வருமா? அல்லது காமெடி கலந்து வருமா? என ரசிகர்கள் பலவிதமான யூகங்களை எழுப்பி வருகின்றனர்.
பாதி லுக்
என்னடா ஃபர்ஸ்ட் லுக்குன்னு சொன்னீங்க பாதி லுக் தான் இருக்கு.. மீதி ஃபேஸ் செகண்ட் லுக்குல வருமா ஆர்.ஜே. பாலாஜி என நெட்டிசன்கள் கிண்டலடித்தும் வருகின்றனர். மேலும், சில ரசிகர்கள், இது தான் ஃபர்ஸ்ட் லுக்கா, ரொம்ப கொடுமை என்றும் வச்சு விளாசி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











