வைரலாகும் மூக்குத்தி அம்மன் பட ஸ்டில்கள்.. லாக்டவுனுக்கு பிறகு நயனின் தரிசனம் கன்ஃபார்மாம்!

சென்னை: ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் மூக்குத்தி அம்மன் படத்தின் பிரத்யேக புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஆர்.ஜே. பாலாஜி மற்றும் என்.ஜே. சரவணன் இயக்கத்தில் சம்மர் ரிலீஸை குறிவைத்து உருவான படம் மூக்குத்தி அம்மன்.

லாக்டவுன் காரணமாக தளபதி விஜய்யின் மாஸ்டர் படம் தள்ளிப் போனதை போல இந்த படத்தின் ரிலீசும் தள்ளிப் போய் இருக்கிறது.

ஆன்லைன் ரிலீஸ்

ஆன்லைன் ரிலீஸ்

ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷின் பெண்குயின் உள்ளிட்ட பல படங்கள் அமேசான் பிரைம் உள்ளிட்ட OTT தளங்களில் நேரடியாக ரிலீஸ் ஆகியும், ரிலீசுக்கு தயார் நிலையிலும் இருக்கின்றன. இந்நிலையில், நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் திரைப்படம் நேரடியாக ஆன்லைனில் ரிலீஸ் ஆகாது என்றும், தியேட்டரில் தான் வெளியாகும் என்றும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மற்றும் ஆர்.ஜே. பாலாஜி உள்ளிட்டோர் உறுதியளித்துள்ளனர்.

எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்

எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்

இந்நிலையில், தற்போது மூக்குத்தி அம்மன் ஹாஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. ஆர்.ஜே. பாலாஜி, மூக்குத்தி அம்மனாக இருக்கும் நயன்தாரா மற்றும் ஆர்.ஜே. பாலாஜியின் குடும்ப உறுப்பினர்களான மெளலி, ஊர்வசி மற்றும் ‘தடம்' படத்தில் நடித்த ஸ்முருதி வெங்கட் உள்ளிட்டோரின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

என்ன கதை

என்ன கதை

ஏழை குடும்பத்தை சார்ந்த ஆர்.ஜே. பாலாஜியின் குடும்பத்துக்குள் மூக்குத்தி அம்மன் ஒரு காரணத்திற்காக என்ட்ரி கொடுக்கிறார். பின்னர், ஆர்.ஜே. பாலாஜியுடன் இணைந்து அவர் செய்யும் லீலைகள் தான் படத்தின் கதை என்ற தகவலையும் இயக்குநரும் நடிகருமான ஆர்.ஜே. பாலாஜி இப்போதே ரிவில் செய்துள்ளார்.

முதல் படம்

முதல் படம்

ஆர்.ஜே. பாலாஜி ஹீரோவாக நடித்த எல்.கே.ஜி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், தற்போது அடுத்த படத்தில் ஹீரோவாகவும், இயக்குநராகவும், இரு குதிரைகளில் சவாரி செய்கிறார். இவர்கள் மட்டுமின்றி இந்த படத்தில் கெளதம் கார்த்திக் மற்றும் யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வித்தியாசமாக

வித்தியாசமாக

ஆர்.ஜே. பாலாஜி உடன் மூக்குத்தி அம்மனான நயன்தாரா செல்ஃபி எடுப்பதும், சாதாரணமாக தரையில் அமர்ந்திருப்பது போன்றும் தற்போது வெளியாகி இருக்கும் புகைப்படங்களில் திரைக்கதை எந்தளவுக்கு வித்தியாசமாக இருக்கும் என்பதை பலரையும் கணிக்க வைத்து கண் கட்டி வித்தை ஆடி வருகிறார் ஆர்.ஜே. பாலாஜி.

எல்.ஆர். ஈஸ்வரி

எல்.ஆர். ஈஸ்வரி

மேலும், ஒரு புகைப்படத்தில் அம்மன் பாடல்களை பாடி பிரபலமான பின்னணி பாடகி எல்.ஆர். ஈஸ்வரி ஒரு காட்சியில் நடித்து இருப்பது போன்ற புகைப்படங்களும் வெளியாகி இருக்கின்றன. படத்தில் நடித்துள்ளாரா? அல்லது மூக்குத்தி அம்மன் படத்தில் பாடியுள்ளாரா? என்பது தெளிவாக தெரியவில்லை. ஆனால், இந்த படத்தில் பல சர்ப்ரைஸ் விஷயங்கள் ரசிகர்களுக்காக காத்திருக்கின்றது என்பது மட்டும் கன்ஃபார்மா தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X