இந்த வருஷம் தீபாவளிக்கு மூக்குத்தி அம்மன் வருகிறாள்.. அதிரடி ட்வீட் போட்ட ஆர்.ஜே. பாலாஜி!

சென்னை: நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள மூக்குத்தி அம்மன் திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் என்கிற சரவெடியான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

காமெடி நடிகராக கலக்கி வந்த ஆர்.ஜே. பாலாஜி நடித்து இயக்கி இருக்கும் படம் மூக்குத்தி அம்மன்.

முதல் முறையாக அம்மன் அவதாரம் எடுத்துள்ள நயன்தாரா ஒடிடியில் ரசிகர்களுக்கு தரிசனம் தர உள்ளார்.

நேத்து நெற்றிக்கண்

நேத்து நெற்றிக்கண்

லாக்டவுன் போரிங் எல்லாம் முடிஞ்சிடுச்சு, இனி நம்ம நயன்தாரா ஆட்டம் ஆரம்பமாகப் போகிறது. நேற்று, விக்னேஷ் சிவன் தயாரிப்பில், மிலிந்த் ராவ் இயக்கத்தில் உருவாகி வரும் நெற்றிக்கண் படத்தின் போஸ்டர் வெளியாகி வைரலானது. இந்நிலையில், இன்று மூக்குத்தி அம்மன் படத்தின் ரிலீஸ் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தீபாவளிக்கு வருகிறாள்

தீபாவளிக்கு வருகிறாள்

சூரரைப் போற்று படம் அமேசான் பிரைமில் அக்டோபர் 30ம் தேதி வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், தீபாவளிக்கு நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள மூக்குத்தி அம்மன் படம் வருகிறது என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பை அந்த படத்தின் ஹீரோவும் இயக்குநருமான ஆர்.ஜே. பாலாஜி தற்போது ட்விட்டரில் அறிவித்து தெறிக்கவிட்டுள்ளார்.

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில்

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில்

அமேசான் பிரைமில் வெளியான புதுப்படங்கள் இதுவரை சொதப்பி வந்த நிலையில், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் மூக்குத்தி அம்மன் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. ராகவா லாரன்ஸின் லக்‌ஷ்மி பாம் இந்தியில் கலக்க உள்ள நிலையில், தமிழில் மூக்குத்தி அம்மன் படத்தை டிஸ்னி வெளியிடுகிறது.

நயன்தாரா தரிசனம்

நயன்தாரா தரிசனம்

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் பொங்கலுக்கு வெளியான தர்பார் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதனை தொடர்ந்து, இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு மீண்டும் நயன்தாரா தரிசனம் மூக்குத்தி அம்மன் படத்தின் மூலம் கிடைக்கப் போகிறது. இதனால், நயன்தாரா ரசிகர்கள் ரொம்பவே ஹேப்பி.

Recommended Video

கம்மல் போடுறதே புடிக்காது | AMMAN SERIAL ACTRESS PAVITHRA GOWDA CHAT PART-01 | FILMIBEAT TAMIL
நீங்க எப்போ வரீங்க கமெண்ட்ரிக்கு?

நீங்க எப்போ வரீங்க கமெண்ட்ரிக்கு?

எல்.கே.ஜி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஆர்.ஜே. பாலாஜிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகி விட்டனர். அது மட்டுமின்றி ஆர்.ஜே. பாலாஜியின் தமிழ் ஐபிஎல் கமெண்ட்ரிகளை கேட்கவே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். "அம்மன் வர்றது இருக்கட்டும் நீங்க எப்போ வரீங்க கமெண்ட்ரிக்கு?" என ஏகப்பட்ட ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X