ப்பா.. என்ன ஒரு மெசேஜ்.. நச்சென இருக்கும் நயன்தாராவின் நெற்றிக்கண் ‘இதுவும் கடந்து போகும்’ பாடல்!
சென்னை: நெற்றிக்கண் படத்தில் இடம்பெற்றுள்ள 'இதுவும் கடந்து போகும்' பாடல் வெளியாகி ரசிகர்களை அதில் மயங்க செய்துள்ளது.
பல லட்சம் உயிர்களை கொன்று குவிக்கும் கொரோனாவும் நம்மை விட்டுக் கடந்து போகும் என்கிற நம்பிக்கையை இந்த பாடல் ரசிகர்கள் நெஞ்சங்களில் நிச்சயம் விதைக்கும் வண்ணம் உருவாகி உள்ளது.
சித் ஸ்ரீராம் குரலில் தேனிசையாக ஒலிக்கும் 'இதுவும் கடந்து போகும்' பாடலில் வாழ்க்கைக்கு தேவையான ஏகப்பட்ட மெசேஜ்களும் நிறைந்து காணப்படுகின்றன.

நயன்தாராவின் நெற்றிக்கண்
சித்தார்த், ஆண்ட்ரியா நடிப்பில் வெளியான 'அவள்' பேய் படத்தை இயக்கிய இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கத்தில் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாகி உள்ள படம் நெற்றிக்கண். பார்வையற்ற பெண்ணாக இந்த படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ளார். நெற்றிக்கண் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான 'இதுவும் கடந்து போகும்' பாடல் தற்போது வெளியாகி உள்ளது.

இதுவும் கடந்து போகும்
இசையமைப்பாளர் கிரிஷ் இசையில் கார்த்திக் நேத்தா வரிகளில் சித் ஸ்ரீராம் குரலில் உருவாகி உள்ளது இந்த 'இதுவும் கடந்து போகும்' பாடல். பாடலின் ஒவ்வொரு வரிகளும் வாழ்க்கையின் வலிகளையும், வாழ்க்கைக்கு தேவையான ஏகப்பட்ட தகவல்களையும் அடுக்கி வைத்திருக்கும் பெட்டகமாக உள்ளது ரசிகர்களை கேட்ட மாத்திரத்தில் அடிமையாக்கி விடுகிறது.
Recommended Video

கொரோனாவும் கடந்து போகும்
உலகளவில் பல லட்சம் உயிர்களை காவு வாங்கிய கொடிய நோய் கொரோனா வைரஸ் கடந்த இரு ஆண்டுகளாக இந்த உலகை ஆட்டிப் படைத்து வருகிறது. இது எப்போது நம்மை விட்டுப் போகும் என்பது தான் அனைவரின் கேள்விக்குரியாக உள்ளது. மேலும், இந்த பாடலை கேட்டால், கொரோனாவும் நம்மை விட்டு சீக்கிரமே கடந்து போகும் என்கிற நம்பிக்கை டானிக் கொடுக்கிறது.

விவாகரத்துக்கு தீர்வு
கொரோனா மட்டுமின்றி வாழ்வின் பல சிக்கல்களான தருணத்தில் இருந்தும் நம்மை காக்கும் அருமருந்தாக இந்த பாடலில் உள்ள அனைத்து வரிகளும் இடம்பெற்றுள்ளன. "உடனே வலிகள் மறைந்து போகாதே.. சில நாள் வரைக்கும் அதை சீண்டாதே.. அதுவாய் மறக்கும் பின் தோன்றாதே" என்கிற வரிகள் விவாகரத்து பிரச்சனைகளுக்கு மட்டுமின்றி தற்கொலை உள்ளிட்ட அனைத்து மோசமான பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்கும் வரிகள் இந்த பாடலில் இடம்பெற்றுள்ளன.
டிரெண்டாகும் நயன்தாரா
மாயா, அறம், டோரா, கோலமாவு கோகிலா, ஐரா உள்ளிட்ட படங்களை தொடர்ந்து மீண்டும் ஹீரோயின் சென்ட்ரிக் கதையில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்திருக்கும் படம் தான் நெற்றிக்கண். 'இதுவும் கடந்து போகும்' பாடல் வெளியாகி உள்ள நிலையில் #Nayanthara என்ற ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











