நெற்றிக்கண்ணை திறந்து எரித்தாலும் இந்த தொல்லை ஒழியாது போல.. பத்தே நிமிடத்தில் பறக்கும் பைரசி!
சென்னை: விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் நயன்தாரா நடிப்பில் சற்று முன் வெளியான நெற்றிக்கண் திரைப்படத்தின் திருட்டு பிரின்ட் வெளியாகி வைரலாகி வருகிறது.
படம் வெளியாகி பத்து நிமிடத்திற்குள் ஹெச்.டி. தர பிரின்ட் வெளியாகி உள்ளதால் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

நயன்தாராவின் நெற்றிக்கண்
பார்வை அற்ற பெண்ணாக வித்தியாசமான தோற்றத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள நெற்றிக்கண் திரைப்படம் தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தொடர்ந்து உமன் சென்ட்ரிக் படங்களில் நடித்து அசத்தி வரும் நிலையில், இந்த படம் அவருக்கு இன்னொரு ஹிட் கொடுக்குமா? என்கிற எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.

சொந்த தயாரிப்பு
இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இணைந்து ரவுடி பிக்சர்ஸ் சார்பில் இந்த படத்தை தயாரித்துள்ளனர். அவள் படத்தை இயக்கிய இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படம் ஆகஸ்ட் 13ம் தேதியான இன்று நண்பகல் 12.30 மணிக்கு ஒடிடி தளத்தில் வெளியானது.

கொள்கையை மீறி
படங்களில் நடிப்பது மட்டும் தான் தனது வேலை என்றும் படங்களுக்கு பப்ளிசிட்டி இனி பண்ணப் போவதில்லை என கொள்கை முடிவாகவே எடுத்து இத்தனை ஆண்டுகள் கடந்து வந்த நடிகை நயன்தாரா சொந்த தயாரிப்பு படம் என்றதுமே பப்ளிசிட்டிக்காக விஜய் டிவியில் பிரத்யேக பேட்டிக் கொடுக்க வந்து விட்டார் என்றும் நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

மூக்குத்தி அம்மனை தொடர்ந்து
ஆர்.ஜே. பாலாஜி இயக்கி நடித்த மூக்குத்தி அம்மன் படத்தில் மூக்குத்தி அம்மனாக நடித்திருந்தார் நயன்தாரா. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் தீபாவளி ரிலீசாக வெளியான அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், மீண்டும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரிலேயே நெற்றிக்கண் படம் வெளியாகி இருக்கிறது.

ஆபாச வசனம்
ஒடிடி தளங்களுக்கு சென்சார் இல்லாத நிலையில், ஆபாச காட்சிகளும், ஆபாச வசனங்களும் அதிக அளவில் தமிழ் சினிமாவிலும் வெளியாகி வருகின்றன. சமீபத்தில் வெளியான நெற்றிக்கண் டீசர் இறுதியில் நடிகை நயன்தாராவும் ஆபாச வசனம் பேசி இருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

நெற்றிக்கண் ரிலீஸ்
சுதந்திர தினத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமையான இன்று நடிகை நயன்தாரா, அஜ்மல் நடிப்பில் உருவாகி உள்ள நெற்றிக்கண் திரைப்படம் ஒடிடி தளத்தில் சற்றுமுன் வெளியானது. இந்த படத்தில் பார்வையற்ற பெண்ணாக இருக்கும் நயன்தாரா பெண்களை கடத்தி கொலை செய்யும் சைக்கோ கொலைகாரனை எப்படி வேட்டை ஆடுகிறார் என்பது தான் கதைக்கருவாக உள்ளது.

பத்து நிமிடத்தில்
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் நெற்றிக்கண் திரைப்படம் ஒடிடியில் வெளியான வெறும் பத்தே நிமிடத்தில் அதன் திருட்டு பிரின்ட் பைரசி தளங்கள் மற்றும் டெலிகிராமில் தீயாக பரவி வருகின்றன. படத்தை பார்த்து இன்னும் விமர்சகர்களே விமர்சனங்களை வெளியிடாத நிலையில், இப்படி பைரசி பிரின்ட் பறக்குதே என விக்னெஷ் சிவன் மற்றும் நயன்தாரா பயங்கர அப்செட் ஆகி உள்ளனர்.

ஹெச்.டி. தரம்
தியேட்டரில் படம் வெளியாகி முதல் காட்சி முடிந்த பிறகு தான் திருட்டுத் தனமாக படங்களை ஒளிப்பதிவு செய்து பைரசி பிரின்ட்கள் தலை தெரிய, கைதட்டல் சத்தம் கேட்க வெளியாகி வந்தன. ஆனால், தற்போது ஒடிடி ரிலீஸ் என்பதால் ஹெச்.டி. தரத்தில் முதல் காட்சி முடியும் முன்னமே படங்கள் வெளியாவது தயாரிப்பாளர்களை பாதிக்கிறதோ இல்லையோ ஒடிடி நிறுவனங்களை கடுமையாக பாதிக்கும்.


Click it and Unblock the Notifications











