திரையரங்குகள் மூடல்… நயன்தாராவின் நெற்றிக்கண் ஒடிடியில் வெளியாகுமா ?
சென்னை : நயன்தாரா நடித்துள்ள நெற்றிக்கண் திரைப்படம் ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
க்ரைம், த்ரில்லிங் கதையாக உருவாகி உள்ள இந்த படத்தில் நயன்தாரா பார்வையற்ற பெண்ணாக நடிக்கிறார்.
தொடர் கொலைகளை செய்யும் கொலைகாரனை அவர் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதை மர்மங்களுடன் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

திரையரங்கு
கொரோனாவின் இரண்டாவது அலை நாளுக்கு நாள் அதிகரித்துவருவதால், மத்திய மாநில அரசுகள் புது காட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இதனால், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு, ஷாப்பில் மால்கள் மூடல், திரையரங்கு மூடல் என அறிவுப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஏப்ரல் 30ந் தேதிக்கும் பிறகு இதே நிலை நீடிக்குமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் உள்ளது.

தலைவி தள்ளிவைப்பு
இந்நிலையில் சசிக்குமார் மற்றும் மிருநாளினி நடித்த எம்.ஜி.ஆர். மகன் திரைப்படம் திரைக்கு வர தயாராக இருந்த நிலையில் தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதேபோல கங்கனா ரணாவத் நடித்த ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான தலைவி ரிலீஸ் தேதியும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

நெற்றிக்கண் ஒடிடியில்
இந்நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண் திரைப்படத்தை ஒடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. அவள் படத்தை இயக்கிய மிலந்த் ராவ் இப்படத்தை இயக்கியுள்ளார். கிரிஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகரன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. இப்படத்தில் அஜ்மல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் .

ஓடிடியில் வெளியாகின
கடந்த ஆண்டு பொன்மகள் வந்தாள், பென்குயின், நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன், விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த கபெ ரணசிங்கம், சூரரைப்போற்று போன்ற படங்கள் ஒடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. மே மாதமும் திரையரங்கு மூடப்படுவதால் மேலும் சில படங்கள் ஒடிடியில் வெளியாக வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications











