ஓடிடிக்கு தயாராகும் நயன்தாராவின் நெற்றிக்கண்.. ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா?
சென்னை : மாறுபட்ட கதைகளில் தொடர்ந்து நடித்து வரும் நயன்தாரா இப்பொழுது விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
மலையாளத்தில் இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான நிழல் சூப்பர் ஹிட் த்ரில்லர் திரைப்படமாக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.
சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரித்து வரும் நயன்தாரா முதன்முறையாக பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண்ணாக நடித்துள்ள நெற்றிக்கண் ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டுள்ளது.

ஜோடியாக தடுப்பூசி
பல்வேறு கட்டங்களாக ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த அண்ணாத்தா படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பிய நயன்தாரா , விக்னேஷ் சிவன் உடன் இணைந்து ஜோடியாக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டது சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டது.

90களில் குயினாக
சந்திரமுகி, தர்பார் ஆகிய படங்களுக்குப் பிறகு மீண்டும் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நயன்தாரா நடிப்பதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு பல மடங்கு இருக்கின்ற நிலையில் இதில் கீர்த்தி சுரேஷ் மற்றுமொரு ஹீரோயினாக நடிக்க 90களில் குயினாக வலம் வந்த குஷ்பு மற்றும் மீனா இதில் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.
Recommended Video

காத்துவாக்குல ரெண்டு காதல்
நானும் ரவுடிதான் கூட்டணி மீண்டும் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் இணைய இந்த படத்தையும் விக்னேஷ் சிவன் இயக்குகிறார். விஜய் சேதுபதி நயன்தாரா மற்றும் சமந்தா லீட் ரோலில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார்.

நெற்றிக்கண்
மாறுபட்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் நயன்தாரா முதல்முறையாக பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண்ணாக நடித்துள்ள நெற்றிக்கண் திரைப் படத்தை அறிமுக இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தை சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலமே தயாரித்துள்ளார். திரையரங்கில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நெற்றிக்கண் ஓடிடியில் நேரடியாக ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டுள்ளது. விரைவில் இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.


Click it and Unblock the Notifications