நயன்தாராவின் நியூலுக்.. ஹைதராபாத்தில் தலைவர் 168 ஷூட்டிங்.. வைரலாகும் புகைப்படங்கள்!

Recommended Video

தினமும் ரூ.70 ஆயிரம் செலவு... நயன்தாரா மீது தயாரிப்பாளர் பரபரப்பு புகார்

ஹைதராபாத்: விஸ்வாசம், பிகில், தர்பார் என படத்துக்கு படம் வெரைட்டியான லுக்கை சின்ன சின்ன மேக்கப் அட்ஜெஸ்ட்மென்ட்டில் காட்டி வரும் நயன்தாரா, தலைவர் 168 படத்துக்காக செம போல்டான லுக்குக்கு மாறி உள்ளார்.

தல அஜித்தின் விஸ்வாசம் படத்தை இயக்கி பிளாக்பஸ்டர் கொடுத்த இயக்குநர், சிவா அடுத்ததாக தலைவர் 168வது படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில், ரஜினியுடன் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, குஷ்பு, மீனா, சூரி, சதீஷ் என நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

செம பிசி

செம பிசி

மூக்குத்தி அம்மன் படத்தின் ஷூட்டிங்கை முடித்துள்ள நடிகை நயன்தாரா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தலைவர் 168 படத்தின் ஷூட்டிங்கிற்காக ஹைதராபாத் பறந்துள்ளார். மேலும், விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சமந்தாவுடன் இணைந்து காத்துவாக்குல இரண்டு காதல் படத்திலும் நடிக்க உள்ளார்.

தலைவி தரிசனம்

சிறுத்தை சிவா இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்து வரும் தலைவர் 168 படத்தில் இணைந்துள்ள நயன்தாரா சில தினங்களுக்கு முன்னதாக, ஹைதராபாத்தில் நடக்கும் ஷூட்டிங்கிற்கு சென்றுள்ளார். விமான நிலையத்தில் தலைவியின் நியூ லுக் தரிசனத்தை பார்த்த ரசிகர்கள், அதனை படம் பிடித்து சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

புது லுக்

நீல நிறத்தில் போல்கா டாட் உடையில், சன் கிளாஸ் அணிந்தபடி, தனது நியூ லுக்கில் நடிகை நயன்தாரா விமான நிலையத்தில் இருந்து ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்ற புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன. மேலும், தலைவர் 168 படத்துக்கான லுக் இதுதான் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

என்ன ரோல்

என்ன ரோல்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீசான தர்பார் திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். தலைவர் 168 படத்தில், ரஜினிக்கு ஜோடியா? அல்லது முக்கிய கதாபாத்திரமா? என்பது இன்னும் தெரியவில்லை. இந்த படத்தில் போல்டான வக்கீல் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார் என்ற தகவல் மட்டுமே கசிந்துள்ளது.

வெயிட்டான ரோல்

வெயிட்டான ரோல்

கடந்த ஆண்டு நயன்தாரா விஸ்வாசம், பிகில் படங்களில் நடித்திருந்தார். இந்த ஆண்டு தொடக்கத்தில், அவரது நடிப்பில் தர்பார் படம் வெளியானது. இந்த மூன்று பெரிய படங்களிலேயே, நயன் தாராவுக்கு வெயிட்டான ரோல் என்றால், அது விஸ்வாசம் படத்தில் தான் அமைந்தது. அதனால், மீண்டும் சிவா இயக்கும் இந்த படத்திலும், நயனுக்கு வெயிட்டான ரோல் தான் இருக்கும் என்பது கன்ஃபார்ம்.

போட்டிக்கு ரெடி

போட்டிக்கு ரெடி

வரும் ஏப்ரல் மாதம் தளபதி விஜய்யின் மாஸ்டர் மற்றும் சூர்யாவின் சூரரைப் போற்று படங்கள் மோத உள்ளன. அந்த போட்டியில், நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் படமும் களம் காண்கிறது. எல்.கே.ஜி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஆர்.ஜே. பாலாஜி இயக்கி நடிக்கும் இந்த படம் நிச்சயம் சம்மருக்கு நல்ல விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காதலனுடன்

காதலனுடன்

சோஷியல் மீடியாவில் நயன்தாரா இல்லை என்றாலும், அவரது காதலன் விக்னேஷ் சிவன், தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இருவரும் மாறி மாறி ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார். நானும் ரவுடி தான் படத்திற்கு பிறகு மீண்டும் அவருடன் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திலும் நயன் நடிக்க உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X