எதிரிக்கு எதிரி நண்பன்... இது நயன்தாரா பாலிசி!
நயன்தாரா நடிப்பில் அறம் படம் நாளை ரிலீசாகிறது. அடுத்து நயன்தாரா கோகோ என்ற படத்தில் நடிக்கிறார். இந்த இரண்டு படங்களுக்கும் காரணம் நயனின் எதிரிக்கு எதிரி நண்பன் பாலிசி என்கிறார்கள்.
அறம் படத்தை இயக்கியிருப்பது கோபி நயினார். இவர் முருகதாஸ் இயக்கிய கத்தி படத்தின் கதை தன்னுடையது என்று நீதிமன்றத்துக்கு சென்றவர்.

முருகதாஸுக்கும் நயன்தாராவுக்கும் இடையே ஏற்கனவே ஒரு பகை ஓடுகிறதாம். கஜினி படத்தில் நயனை டம்மியாக்கியதால் ஏற்பட்ட பகை அது என்கிறார்கள். அதனால்தான் அதன் பின் எவ்வளவோ கேட்டும் முருகதாஸ் படங்களில் நயன் நடிக்கவில்லையாம். எனவே தனது எதிரியான முருகதாஸுக்கு குடைச்சல் கொடுத்தவர் என்பதற்காகவே கோபியை அழைத்து கதை கேட்டார் என்றும் சொல்கிறார்கள்.
அடுத்து நயன் நடிக்கவிருக்கும் கோகோ படத்தின் இயக்குநர் நெல்சன். இவர் சிம்புவை வைத்து வேட்டை மன்னன் படத்தை இயக்கியவர். பாதி படத்தின்போதே சிம்பு படத்தை ட்ராப் செய்ய வாய்ப்பில்லாமல் தவித்தார். சிம்புவால் பாதிக்கப்பட்டவர் என்பதாலேயே நயன் அவரை அழைத்து வாய்ப்பு தந்தார் என்கிறார்கள்.
நயனின் இந்த பாலிசி இரண்டு இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்திருக்கிறது. நல்ல விஷயம்தானே!


Click it and Unblock the Notifications











