சம்பளம் குறைத்து நடித்த படம்.. மார்ச் 4-ல் ரிலீஸ் ஆகிறது நயன்தாராவின் மிரட்டும் த்ரில்லர்!
சென்னை: நயன்தாரா நடித்துள்ள த்ரில்லர் படம் மார்ச் மாதம் 4 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாகக் கூறப்படுகிறது.
நடிகை நயன்தாரா நடித்து கடைசியாக 'மூக்குத்தி அம்மன்' படம் வெளியானது. இதில் ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக நடித்திருந்தார்.
இந்தப் படம் ஓடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. மவுலி, ஊர்வசி, மேயாத மான் இந்துஜா உட்பட பலர் நடித்திருந்தனர்.

விக்னேஷ் சிவன்
என்ஜே.சரவணனுடன் இணைந்து ஆர்.ஜே.பாலாஜி இந்தப் படத்தை இயக்கி இருந்தார். இதையடுத்து ரஜினிகாந்தின் அண்ணாத்த, விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படங்களில் நடிக்கிறார் நயன்தாரா. அவர் நடித்துள்ள நெற்றிக்கண் படமும் ரெடியாகிவிட்டது.

த்ரில்லர் நிழல்
இந்நிலையில் நடிகை நயன்தாரா, மலையாளத்தில் நிழல் என்ற த்ரில்லர் படத்தில் நடித்துள்ளார். இதில் ஹீரோவாக குஞ்சாக்கோ போபன் நடித்திருக்கிறார். அப்பு என் பட்டாத்திரி இயக்கும் இதன் ஷூட்டிங் எர்ணாகுளத்தில் தொடர்ந்து நடந்து வந்தது. குஞ்சாக்கோ போபனும் நயன்தாராவும் டிவென்டி 20 படத்தில் ஏற்கனவே ஒன்றாக நடித்திருந்தனர்.

ஹீரோயின் கேரக்டர்
12 வருடங்களுக்குப் பிறகு இப்போது மீண்டும் சேர்ந்து நடிக்கின்றனர். 'இந்தப் படத்தில் ஹீரோயின் கேரக்டருக்கு முக்கியத்துவம் உள்ளது. அதற்காக பல நடிகைகளை தேடினர். நான் தான் நயன்தாராவை பெயரைச் சொன்னேன் என்று முன்பு அளித்த பேட்டியில் கூறியிருந்தார் குஞ்சாகோ போபன்.

மார்ச்சில் ரிலீஸ்
கொரோனா காரணமாக, கேரள நடிகர், நடிகைகள் சம்பளத்தை குறைத்துக் கொள்ளும்படி மலையாள தயாரிப்பாளர் சங்கம் கேட்டுக்கொண்டது. இதையடுத்து இதில் நடிக்க நடிகை நயன்தாராவும் சம்பளத்தைக் குறைத்துக் கொண்டார். இந்நிலையில், இந்தப் படம் மார்ச் 4 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாக இருப்பதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











