நயன்தாராவின் ‘நிழல்‘ டிரைலர் அவுட்…ரசிகர்கள் மகிழ்ச்சி !
சென்னை : லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ள மலையாள திரைப்படமான நிழல் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
நயன்தாரா எந்த மொழி படங்களில் நடித்தாலும், அனைத்து தரப்பு மக்களிடம் இருந்தும் அதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்.
இப்படம் ஏப்ரல் 2ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

காத்து வாக்குல இரண்டு காதல்
தென்னிந்திய திரையுலகில் பிஸியான நடிகையாக வலம் வரும் நயன்தாரா, ரஜினிகாந்துடன் 'அண்ணாத்த திரைப்படத்திலும், காதலர் விக்னேஷ் சிவனின் தயாரிப்பில் உருவாகி வரும் காத்து வாக்குல இரண்டு காதல் படத்திலும் 'நெற்றிக்கண்' என பிசியாக நடித்து வருகிறார்.

அப்பு பட்டதாரி
பிரபல மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன், இப்படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தை தேசிய விருது பெற்ற எடிட்டர் அப்பு என் பட்டதாரி இயக்கி உள்ளார். நடிகர் பிரத்வி ராஜின் படம் விரைவில் வெளியாக உ ள்ளதால் அதற்குள்ளாக இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

க்ரைம் த்ரில்லிங்
இந்நிலையில் மலையாளத் திரைப்படமான 'நிழல்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தின் அனைத்துப்பணிகளும் முடிவடைந்த நிலையில் டிரைலர் வெளியாகி உள்ளது. ஒரு குழந்தையை மையமாக வைத்தே கதை நகர்த்தப்பட்டுள்ளது. ஒரு கொலை அந்த கொலையைத் தொடர்ந்து அந்த குழந்தைக்கு ஏற்படும் வித்தியாசமான மன உளவியல் பிரச்சினையில் கதை தொடங்குகிறது. க்ரைம் த்ரில்லர் திரைப்படமாக உருவாகி உள்ள இப்படத்தின் டிரைலர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரசிகர்கள் மகிழ்ச்சி
மலையாளம், தமிழ், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் நயன்தாரா ரவுண்ட் கட்டி நடித்து வருகிறார். நிழல் படத்தைக்காண மலையாள ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் நயன்தாரா வெறியர்களும் ஆர்வமும் உள்ளனர். இப்படம் ஏப்ரல் 2ந் தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











