நாடித்துடிப்பை எகிற வைக்கும் நயன்தாராவின் ஓ2... ஓடிடியில் நேரடி ரிலீஸ்... விரைவில் அறிவிப்பு!

சென்னை : முன்னணி தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நயன்தாரா நடித்துள்ள O2 திரைப்படம் உருவாகியுள்ளது. அறிமுக இயக்குநர் விக்னேஷின் இயக்கத்தில் த்ரில்லர் படமாக இந்தப் படம் உருவாகியுள்ள நிலையில், படம் விரைவில் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்

உலகளவில் முன்னணி ஓடிடி தளமாக விளங்குகிறது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார். தமிழில் சிறப்பான பல படங்கள், வெப் தொடர்களை வெளியிட்டு வருகிறது. இந்த தளத்தில் சமீபத்தில் வெளியான டாணாக்காரன் படம் சிறப்பான விமர்சனங்களை பெற்றது. இந்தப் படத்தை தமிழ் இயக்கியிருந்தார்.

டாணாக்காரன் படம்

டாணாக்காரன் படம்

விக்ரம் பிரபு இந்தப் படத்தில் ஹீரோவாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரின் அடுத்த அதிரடி வெளியீடாக ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் நயன்தாரா நடித்துள்ள O2 படத்தை வெளியிட உள்ளது. இயக்குநர் விக்னேஷ் இயக்கத்தில் இந்தப் படம் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது.

த்ரில்லர் படம் ஓ2

த்ரில்லர் படம் ஓ2

படம் சிறப்பான அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுக்கும் என்று இதன் இயக்குநர் தற்போது தெரிவித்துள்ளார். 8 வயது மகனுடன் பேருந்து விபத்தில் சிக்கும் ஒரு பெண், நுரையீரல் பிரச்சினைக்காக தன்னுடைய மகனுடன் எப்போதும் இருக்கும் ஆக்ஸிஜன் சிலிண்டரை எவ்வாறு மற்றவர்களிடம் இருந்து காக்கிறார் என்பதை மையமாக இந்தக்கதை கொண்டுள்ளது.

8 வயது மகனின் தாயாக நயன்தாரா

8 வயது மகனின் தாயாக நயன்தாரா

தமிழ்நாடு, கேரள மலைப்பகுதிகளில் நடப்பதாக இந்தக் கதை எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் 8 வயது மகனின் தாயாக நயன்தாரா நடித்துள்ளார். மகனாக ரித்விக் நடித்துள்ளார். இவர்களுடன் லீனா, RNR மனோகர், ஆடுகளம் முருகதாஸ், ஜாஃபர் இடுக்கி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பு

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பு

இயக்குநர் விக்னேஷ் GS எழுதி இயக்கியுள்ள இப்படத்திற்கு, விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். தமிழ் A அழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் SR பிரகாஷ் பாபு, SR பிரபு இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளனர். ரசிகர்களை இருக்கை நுனியில் இருத்தி வைக்கும் வகையில் இந்தப் படத்தின் திரைக்கதை அமைந்துள்ளதாக இயக்குநர் கூறியுள்ளார்.

விரைவில் ஓடிடியில் ரிலீஸ்

விரைவில் ஓடிடியில் ரிலீஸ்

படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் படம் ரிலீசாக உள்ளது. மாயா உள்ளிட்ட த்ரில்லர் வகை படங்களை முன்னதாக நடிகை நயன்தாரா நடித்துள்ள நிலையில், இந்தப் படமும் அத்தகைய அனுபவத்தை ரசிகர்களுக்கு அளிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X