Don't Miss!
- Finance
பட்ஜெட் 2023: உங்க சம்பளத்துக்கு வரிச் சேமிப்பு எவ்வளவு..? புட்டு புட்டு வைக்கும் தகவல்..!
- Lifestyle
தாய்மார்களே! உங்க குழந்தைக்கு பாலோடு இந்த பழங்களை சேர்த்து சாப்பிட கொடுக்கவே கூடாதாம்..ஏன் தெரியுமா?
- News
காவி நிறத்தில் குடுமி- பூணூலோடு பிராமின் குக்கீஸ்.. பிஸ்கெட்டிலும் ஜாதியமா? நெட்டிசன்கள் கொந்தளிப்பு
- Automobiles
சிஎம் பேரனா இருந்தாலும் தப்பிக்க முடியாது! இத்தன லட்சம் கார்களை அழிக்க போறாங்களா! திடீர் அதிரடியால் கலக்கம்!
- Technology
90's கிட்ஸ்களின் கனவு கேட்ஜெட்.! இப்போது ஹை-டெக் டிசைனில்.! அலறவிட்ட Sony Walkman விலை.!
- Sports
அடுத்த விக்கெட்டும் காலி.. ஆஸி,டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு பெரும் அடி.. என்ன செய்யப்போகிறார் ரோகித்
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
விக்னேஷ் சிவன் கூட இருக்கும் போதே.. ‘ஐ லவ் யூ நயன்தாரா’ சொன்ன ரசிகர்கள்.. என்ன ரியாக்ஷன் தெரியுமா?
சென்னை: நடிகை நயன்தாரா தனது கனெக்ட் படத்தின் ப்ரீமியர் நிகழ்ச்சிக்காக தியேட்டர் வந்த நிலையில், ரசிகர்கள் தலைவி என்றும் லேடி சூப்பர்ஸ்டார் என்றும் கத்தி கோஷமிட்டனர்.
கூட்டத்தில் ரசிகர் ஒருவர் 'ஐ லவ் யூ நயன்தாரா' என கத்த அதற்கு நயன்தாரா கொடுத்த ரியாக்ஷன் டிரெண்டாகி வருகிறது.
ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள இந்த கனெக்ட் திரைப்படம் வரும் டிசம்பர் 22ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
ப்பா.. என்னம்மா சிரிக்கிறாரு நயன்தாரா.. கனெக்ட் படத்தின் ஸ்பெஷல் ப்ரீமியர்.. கூடவே விக்னேஷ் சிவன்!

மாயா தந்த வெற்றி
ஹீரோயின் சென்ட்ரிக் படத்தில் நடிக்க முடிவு செய்த நடிகை நயன்தாரா, இயக்குநர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் வெளியான மாயா படத்தில் நடித்து அசத்தி இருந்தார். பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரி அர்ஜுனன் நடித்த மாயா திரைப்படம் தமிழ் சினிமாவில் வித்தியாசமான ஹாரர் படமாக வெளியாகி ரசிகர்களை வெகுவாக பயமுறுத்தியது. அதன் பின்னர் நயன்தாரா டோரா, ஐரா உள்ளிட்ட பேய் படங்களில் நடித்தும் அந்த படங்கள் அவருக்கு பெரிதாக கை கொடுக்கவில்லை. இந்நிலையில், மீண்டும் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் கனெக்ட் படத்தில் கைகோர்த்துள்ளார் நயன்தாரா.

கனெக்ட் ப்ரமோஷன்
பொதுவாக எந்தவொரு பட ப்ரமோஷனுக்கு வரமாட்டேன் என அக்ரீமென்ட்டிலேயே தெளிவாக சொல்லிவிடும் வழக்கத்தை கொண்டுள்ள நயன்தாரா. தங்கள் சொந்த கம்பெனி தயாரிப்பில் உருவாகும் படங்களுக்கு மட்டும் இதுபோன்ற ப்ரமோஷன்களை செய்து வருகிறார் என்கிற குற்றச்சாட்டு சமீபத்தில் கனெக்ட் ப்ரீமியரில் அவர் கலந்து கொண்ட நிலையில், கிளம்பி உள்ளது.

ஐ லவ் யூ நயன்தாரா
தியேட்டரில் படம் பார்க்க வந்த நடிகை நயன்தாராவை ரசிகர்கள் திடீரென சூழ்ந்து கொண்டனர். ரசிகர்களின் அன்பு மழையில் நனைந்த நயன்தாரா புன்னகைத்தும், அவர்களுக்கு கையசைத்தும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அப்போது ஒரு ரசிகர் கூட்டத்தில் இருந்து 'ஐ லவ் யூ நயன்தாரா' என கத்தினார்.

நயன்தாரா ரியாக்ஷன்
கணவர் விக்னேஷ் சிவன் அருகே இருந்த போது ரசிகர் ஒருவர் நயன்தாராவை பார்த்து 'ஐ லவ் யூ' என கத்திய நிலையில், அதை கவனித்த நயன்தாரா அந்த ரசிகரை பார்த்து "ஐ லவ் யூ டூ" என சொன்னது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. சோஷியல் மீடியாவில் அந்த காட்சிகள் தீயாக டிரெண்டாகி வருகின்றன.

ரசிகர்கள் ஹாப்பி
நீண்ட நாட்கள் கழித்து நடிகை நயன்தாராவை இப்படி அருகே சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததை எண்ணி ஏகப்பட்ட ரசிகர்கள் ரொம்ப ஹாப்பி ஆகி உள்ளனர். ரசிகர்களின் அன்பை பார்த்து நடிகை நயன்தாராவும் ரொம்ப சந்தோஷமடைந்துள்ளார். நிச்சயம் இந்த கனெக்ட் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய அளவில் கைகொடுக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.