நயன்தாரா வெளியிட்ட 'விக்கி நயன்' போட்டோ... இன்னிக்கு தான் காதலர் தினமாம்!

By Vignesh Selvaraj

Recommended Video

ட்ரெண்ட் ஆகும் 'விக்கி நயன்' போட்டோ

சென்னை : நல்ல கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பதன் மூலம் தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார் நடிகை நயன்தாரா.

நயன்தாராவும், டைரக்டர் விக்னேஷ் சிவனும் நீண்டகாலமாக காதலித்து வருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில், காதலர் தினம் கடந்ததை அடுத்து இன்று விக்னேஷ் சிவனுடன் நெருக்கமாக இருக்கும் ஒரு புகைப்படத்தை ட்விட்டரில் பதிவேற்றி இருக்கிறார் நயன்தாரா.

நயன்தாரா

நயன்தாரா

நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் நீண்டகாலமாக காதலித்து வருகிறார்கள். சமீபத்தில் விக்னேஷ் சிவன் பிறந்தநாளின்போது, அமெரிக்காவில் போய் இருவரும் கொண்டாடிவிட்டுத் திரும்பியது குறிப்பிடத்தக்கது.

காதல்

காதல்

விக்னேஷ் சிவனின் பிறந்தநாளுக்கு நயன்தாரா அவரை ஸ்பெஷலாக வாழ்த்துவதும், நயன்தாராவின் பிறந்தநாளுக்கு விக்னேஷ் சிவன் அவரைக் கொஞ்சுவதுமாக இவர்கள் காதல் அனைவருக்கும் தெரிந்ததே. சமீபத்திய பிறந்தநாளன்று தங்கமே எனக் கொஞ்சலோடு வாழ்த்தினார் விக்னேஷ் சிவன்.

காதலர் தினம்

காதலர் தினம்

நேற்று காதலர் தினத்தை உலக மக்கள் பலரும் மகிழ்ச்சியாகக் கொண்டாடினார்கள். இந்நிலையில், இன்று விக்னேஷ் சிவனுடன் இருக்கும் ஸ்பெஷல் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவேற்றி காதலை வெளிப்படுத்தி இருக்கிறார் நயன்தாரா.

ஸ்பெஷல் புகைப்படம்

ஸ்பெஷல் புகைப்படம்

இந்த புகைப்படத்தில் நயன்தாரா 'N' எனக் குறிப்பிடப்பட்ட உடையையும், விக்னேஷ் சிவன் 'V' எனக் குறிப்பிடட்ட உடையையும் அணிந்து நெருக்கமாக நிற்கிறார்கள். 'VikkiNayan' எனக் குறிப்பிட்டு நயன்தாரா வெளியிட்டிருக்கும் இந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

செம ஜோடி

செம ஜோடி

இன்றுதான் நயனுக்கும் விக்கிக்கும் காதலர் தினமாம். ரசிகர்கள் பலர் இந்த அசத்தலான ஜோடியை வாழ்த்தியிருக்கிறார்கள். ஒரு சிலர் வயிற்றெரிச்சலாக இருப்பதாக சோக ரிப்ளை செய்திருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X