ஒரே பைக்ல நயன்தாரா, சமந்தா.. அதுவும் டைட்டா ஹக் பண்ணிக்கிட்டு.. விஜய்சேதுபதிக்கு வாழ்வு தான்!

சென்னை: இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் உருவாகி வருகிறது.

Recommended Video

Thalapathy 66 படத்தை இயக்கும் Vijay மகன் Jason Sanjay

அந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். அவரது இசையில் காதலர் தினத்தை முன்னிட்டு "ரெண்டு காதல்" என்கிற சூப்பரான லவ் ஃபெயிலியர் பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்நிலையில், அந்த படத்தில் இருந்து வெளியாகி உள்ள பைக் போட்டோ வேற லெவலில் வைரலாகி வருகிறது.

அதே டீம்

அதே டீம்

கடந்த 2015ம் ஆண்டு வெளியான விக்னேஷ் சிவனின் நானும் ரெளடி தான் படத்தில் விஜய்சேதுபதி மற்றும் நயன்தாரா இணைந்து நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்தார். அந்த படம் இளைஞர்கள் மத்தியில் வேற லெவல் வரவேற்பை பெற்று ஹிட் ஆனது. இந்நிலையில், மீண்டும் அதே டீமுடன் கூடுதலாக சமந்தாவும் இணைந்து உருவாகி வரும் படம் தான் காத்து வாக்குல ரெண்டு காதல்.

நயன்தாராவுடன் காதல்

நயன்தாராவுடன் காதல்

நானும் ரெளடி தான் படத்தின் ஷூட்டிங்கில் விக்னேஷ் சிவனின் கேரக்டர் பிடித்துப் போக நயன்தாராவும் அவரும் காதலிக்க தொடங்கினர். கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் கடந்த நிலையில் இருவரும் ஒருவரை ஒருவர் தொடர்ந்து காதலித்து வருகின்றனர். கல்யாணம் தான் எப்போ என்று இருவரும் சொல்ல மறுக்கின்றனர்.

லவ் பிரேக்கப்

லவ் பிரேக்கப்

இந்நிலையில், காதலர் தின பரிசாக விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவாகி உள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திற்கு அனிருத் இசையமைத்து பாடியுள்ள லவ் பிரேக்கப் பாடலான ரெண்டு காதல் பாடலை காதலர் தினத்தன்று படக்குழு வெளியிட்டது. டாக்டர் ஆல்பத்தை தொடர்ந்து அனிருத்தின் இந்த பாடல் அவரது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

ஒரே பைக்கில்

ஒரே பைக்கில்

ஒரே படத்துல நயன்தாரா மற்றும் சமந்தா உடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு ஏகப்பட்ட முன்னணி ஹீரோக்களுக்கே இன்னமும் கனவாக இருக்கும் நிலையில், முதன் முறையாக விஜய்சேதுபதிக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. அதிலும் ஒரே பைக்கில் இருவரையும் பின்னாடி உட்கார வைத்துக் கொண்டு டைட் ஹக் பண்ணிக் கொண்டு விஜய்சேதுபதி பைக் ஓட்டுவதற்கெல்லாம் பெரிய மச்சமே இருக்க வேண்டும் என்று சொல்லலாம்.

படம் வரட்டும்

படம் வரட்டும்

விஜய்சேதுபதி பைக் ஓட்ட அவருக்கு பின்னால் நயன்தாராவும், சமந்தாவும் கட்டிப்பிடித்து உட்கார்ந்திருக்கும் கிராப் செய்யப்பட்ட இந்த போஸ்டரே தற்போது இப்படி வைரலாகி வரும் நிலையில், அந்த பாடல் வீடியோ மற்றும் படம் வந்தால் ரசிகர்களின் ரியாக்‌ஷன் எப்படி இருக்கும் என்பதை காண வெயிட்டிங்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X