ஆட்டம் பாட்டத்துடன் நடந்த ரகுல் ப்ரீத் சிங் திருமணம்..ஒன்று திரண்டு வாழ்த்திய பிரபலங்கள்!
சென்னை: பான் இந்தியா நாயகியாக வலம் வரும் ரகுல் ப்ரீத் சிங் தயாரிப்பாளர் ஜாக்கி பாக்னானி என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமணம் கோவாவில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த திருமணத்தில் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்த நிலையில், நயன்தாரா, சமந்தா என பலரும் இணையத்தின் வாயிலாக வாழ்த்து தெரிவித்தனர்.
திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கிய நிலையில் ஆனந்த் கராஜ் என்ற சீக்கிய முறைப்படி இவர்களின் திருமணம் நேற்று நடைபெற்றுள்ளது. இந்தத் திருமணத்தில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். அதேசமயம் திரையுலகை பொறுத்தவரை நடிகர்கள் அர்ஜுன் கபூர், வருண் தவான், ஷாஹித் கபூர், சோனம் கபூர், அக்ஷய் குமார், பூமி பெட்னேக்கர், ரித்தேஷ் தேஷ்முக், டைகர் ஷெராப் உள்ளிட்ட சில பிரபலங்கள் பங்கேற்றனர்.

ரகுல் ப்ரீத் சிங்: ரகுல் ப்ரீத் சிங் தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். அது மட்டுமல்ல அவருடைய காதலரான ஜாக்கி பாக்னானி மியா ஃபோட்டோ மியான் என்ற படத்தில் வெளியீட்டுக்காக காத்திருக்கிறார் இந்த படத்தில் அக்ஷய் குமார் சோனா பிருத்திவிராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முன்னணி வேடம் என்று நடிக்க உள்ளனர்.
தீரன் அதிகாரம் ஒன்று: தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ராகுல் ப்ரீத் சிங். தமிழில் அருண் விஜய் நடித்த தடையறத் தாக்க படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் இவருக்கு நடிக்க வாய்ப்பு வந்தது, ஆனால், பெரிதாக வலம் வரமுடியவில்லை. அதன் பிறகு முன்னணி நடிகர்களான கார்த்தியுடன் இணைந்து தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்திருந்தார். அந்த படம் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்தது.
இந்தியன் 2: தீரன் அதிகாரம் ஒன்று படத்திற்கு பிறகும் தமிழில் படவாய்ப்பு இல்லாததால், பாலிவுட் பக்கம் சென்றார். தற்போது, சிறிய கேப்புக்கு பிறகு தமிழில் சிவகார்த்திகேயனுடன் அயலான் படம் மூலம் என்ட்ரி கொடுத்துள்ளார். ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக எடுக்கப்பட்டு வந்த இந்த படம் பல பிரச்சனைகளை கடந்து பொங்கல் பண்டிகைக்கு வெளியானது. தற்போது இவர் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு இவருக்கு பட வாய்ப்பு குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரம்மாண்ட திருமணம்: தெலுங்கு மற்றும் இந்தியிலும் பிஸியாக இருக்கும் ரகுல் ப்ரீத் சிங் தன்னுடைய நீண்டகால காதலர், ஜாக்கி பக்நாணியை காதலித்து வந்த நிலையில் இவர்களின் திருமணம் கோவாவில் ஆடம்பர ஹோட்டலில் நேற்று தடபுடலாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில், பாலிவுட் ஜோடியான ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
பிரபலங்கள் வாழ்த்து: கோலாகலமாக நடந்த இவர்களின் திருமணத்தில் கலந்து கொள்ளாத சில பிரபலங்கள் இணையத்தின் வழியாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தெலுங்கு நடிகர் ராம் சரணின் மனைவி உபாசனா மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதே போல நயன்தாரா, சமந்தா, ராஷி கண்ணா, மிருணால் தாக்கூர் மற்றும் பூமி பெட்னேகரும் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
வைரலாகும் புகைப்படம்: இந்த திருமணத்திற்காக நடிகை ர்குல் ப்ரீத்தி சிங், பிஸ்தா நிற லெஹங்கா பாவாடையுடன் க்யூட்டாக இருந்தார். லெஹங்கா துப்பட்டாவில் மலர் எம்ப்ராய்டரி வேலைப்பாடுகளை கண்ணை பறித்தன. இதற்கு பொருத்தமாக வைர நெக்லஸ் அணிந்து இருந்தார். அதே போல ஜாக்கி வெள்ளை நிற ஷெர்வானி அணிந்து இருந்தார். அந்த போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











