Nayanthara: தனுஷ்க்கு மட்டும் நன்றி சொல்லல.. நீயா நானா சண்டைக்கு நயன் தயார்தான் போல!
சென்னை: கடந்த வார இறுதியில் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவையும் பரபரப்பாக்கிய விஷயம் நயன்தாராவின் கடிதம்தான். நடிகர் தனுஷ்க்கு அவர் எழுதிய கடிதத்தினால் ஒட்டுமொத்த இணையமுமே பற்றிக் கொண்டது. அதாவது நயன் -விக்கி திருமணத்தை மையமாகக் கொண்டு நெட் ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான டாக்குமெண்டரி நயன்தாரா: பியாண்ட் த ஃபேர் டைல் என்ற பெயரில் வெளியானது. இதில் நயன் நடித்த படங்களில் இருந்து சில காட்சிகள் வைக்கப்பட்டிருந்தது. இப்படியான நிலையில் நயன் விக்கி இணைந்து பணியாற்றிய நானும் ரவுடி தான் படத்தின் காட்சியும் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் தனுஷ் இந்தக் காட்சிகளைப் பயன்படுத்த அனுமதி அளிக்கவில்லை என அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இப்படியான நிலையில் நயன்தாராவின் பிறந்த நாளான கடந்த 19ஆம் தேதி அந்த டாக்குமெண்டரி வெளியாகியது. டாக்குமெண்டரியைப் பார்த்த பலரும் பல விஷயங்களை சமூக வலைதளத்தில் பேசினார்கள். குறிப்பாக டாக்குமெண்டரி தமிழில் இருந்திருக்கலாம் என்ற பேச்சு அதிகம் அடிபட்டது. மேலும், டாக்குமெண்டரியில் நானும் ரவுடி தான் படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோக்களும் இடம் பெற்றிருந்தது. ஏற்கனவே டாக்குமெண்டரியின் டீசரில் நானும் ரவுடிதான் படத்தின் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட வீடியோவில் மூன்று நொடிகள் இடம் பெற்றது. அதற்கு ரூபாய் 10 கோடிகள் நஷ்டஈடு கேட்டு தனுஷ் நோட்டீஸ் அனுப்பியதாகவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் நயன் தனது டாக்குமெண்டரியில் இடம்பெற்ற திரைப்படக் காட்சிகளை இணைத்துக் கொள்ள ஒப்புதல் வழங்கிய தயாரிப்பு நிறுவனங்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதில் பாலிவுட் தொடங்கி, தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள், மலையாள சினிமா தயாரிப்பாளர்கள், தெலுங்கு சினிமா தயாரிப்பாளர்கள் என அனைவரது பெயரையும் குறிப்பிட்டு நன்றி தெரிவித்துள்ளார். இதில் நானும் ரவுடி தான் படத்தின் தயாரிப்பளார் தனுஷ்க்கு நன்றி தெரிவிக்கவில்லை.

நன்றி: நயன் தனது கடிதத்தில், " வணக்கம். நமது "Nayanthara: Beyond the Fairy Tale' ஆவணப்படம் வெளியாகி இருக்கிறது. பல்வேறு மகிழ்வான தருணங்கள் அடங்கிய எனது திரைப் பயணத்தில், நாம் இணைந்து பணியாற்றிய திரைப்படங்கள் மிகவும் இன்றியமையாதது. அதனால், அந்த படங்கள் குறித்த நினைவுகளும், ஆவணப்படத்தில் இடம்பெற வேண்டும் என உங்களை அணுகியபோது, எந்தவித தயக்கமோ, தாமதமோ இல்லாமல் தடையில்லா சான்றிதழ் வழங்கிய அந்த பேரன்பை என்றென்றும் நன்றியோடு நினைவில் வைத்துக் கொள்வேன்.

ஷாரூக் கான்: பாலிவுட் சினிமாவில் இருந்து ரெட் சில்லீஸ் எண்டர்டைமெண்ட் ஷாரூக் கான் மற்றும் கவுரிகானுக்கு நன்றிகள். அதேபோல் தமிழ் சினிமாவில், கவிதாலயா தயாரிப்பு நிறுவனத்தின் இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர், புஷ்பா கந்தசாமி, லைகா புரடெக்ஷன்ஸின் சுபாஸ்கரன், வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷ்னலின் ஐசரி கணேசன், ஏ.ஜி.எஸ் எண்டர்டைமெண்டின் கல்பாத்தி குடும்பத்தினர், ரெட் ஜெய்ண்ட் மூவீஸின் உதயநிதி ஸ்டாலின் மற்றும் செண்பகமூர்த்தி, சிவாஜி புரடெக்ஷனின் ராம் குமார் கணேசன், ட்ரீம் வாரியர்ஸின் பிரபு மற்றும் பிரகாஷ் பிரபு, ஐயங்கரன் இண்டர்நேஷ்னலின் கருணாமூர்த்தி, கே.ஆர்.ஜே ஸ்டூடியோஸின் கோடாபதி ராஜேஸ், 24ஏ.எம் ஸ்டூயோஸின் ராஜா ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தனுஷ்: அதேபோல், ஸ்டூடியோ க்ரீனின் ஞானவேல் ராஜா, ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸில் ஏ.ஆர். முருகதாஸ், தமீன்ஸ் ஃபிலிம்ஸின் ஷிபு தமீன்ஸ், சரவணா கிரியேசன்ஸின் சேலம் சந்திரசேகரன், சற்குணம் சினிமாஸ், ட்ரம் ஸ்டிக் புரடெக்ஷன்ஸின் சக்திவேல் மற்றும் விஜயன், கேமியோ ஃபிலிம்ஸின் ஜெயக்குமார் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதேபோல் மலையாள சினிமா தயாரிப்பாளர்களுக்கும் தெலுங்கு சினிமா தயாரிப்பாளர்களுகும் நயன் நன்றி தெரிவித்துள்ளார். ஆனால் இதில் நடிகர் தனுஷ்க்கு நன்றி தெரிவிக்காதது, பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.




Click it and Unblock the Notifications











