அப்பவே செம க்யூட்.. சின்ன வயசுல நயன்தாரா எப்படி இருக்காருன்னு பாருங்க.. அரிய பள்ளிப்பருவ புகைப்படம்!
சென்னை: லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் நடிகை நயன்தாராவின் அரிதான பள்ளிப்பருவ புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என இந்த ஆண்டு பல்வேறு மொழிகளில் நடிகை நயன்தாரா நடித்து வருகிறார்.
அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிரித்விராஜ் நடிப்பில் உருவாகி உள்ள கோல்டு படத்திலும் நயன்தாரா தான் நாயகி.

ட்வின்ஸ்
இந்த ஆண்டு நடிகை நயன்தாராவுக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு அப்பா அம்மா ஆகிட்டோம் என பதிவிட்டு இருந்தனர். அதன் பின்னர் வாடகைத் தாய் முறையில் குழந்தைகள் எந்தவொரு விதிமீறலும் இல்லாமல் பிறந்தன என விளக்கம் அளிக்கப்பட்டது.

வெற்றியும் தோல்வியும்
லேடி சூப்பர்ஸ்டார் என தென்னிந்திய திரையுலகையே கலக்கி வரும் நடிகை நயன்தாராவுக்கு இந்த ஆண்டு வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வந்தது என்று தான் சொல்ல வேண்டும். கணவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் படம் வெற்றிப் பெற்ற நிலையில், ஓ2, காட்ஃபாதர் உள்ளிட்ட படங்கள் ஓடவில்லை. கோல்டு திரைப்படம் மலையாளத்தில் இன்று வெளியாகி உள்ளது. தமிழில் நாளை வெளியாகவிருக்கிறது.

பள்ளி பருவத்திலேயே மாஸ்
டயானா மரியம் குரியனாக பள்ளிப் பருவத்தில் இருக்கும் போதே நடிகை நயன்தாரா செம மாஸாக உள்ளாரே என அவரது ஸ்கூல் குரூப் போட்டோ ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் அதிகம் டிரெண்டாகி வருகிறது. அந்த போட்டோவில் நயன்தாரா எங்கே இருக்கிறார் என்பதை தேடிக் கண்டுபிடித்த ரசிகர்கள் அவரது தோற்றத்தை பார்த்து வியந்து பாராட்டி வருகின்றனர்.

கை கொடுக்குமா கோல்டு
அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிரித்விராஜ், நயன்தாரா நடிப்பில் வெளியான கோல்டு மலையாள வெர்ஷன் ரசிகர்களுக்கு பெரிதாக ஈர்க்கவில்லை என விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. தமிழில் நாளை வெளியாக உள்ள கோல்டு திரைப்படம் இங்கே நயன்தாராவுக்கு கைகொடுக்குமா என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

ஷாருக்கான் ஜோடி
சூப்பர்ஸ்டார் ஜோடி என சொல்லி சிவகாசி படத்தில் விஜய்யுடன் ஆட்டம் போட்ட நயன்தாரா சமீபத்தில் காட்ஃபாதர் படத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் உடன் இணைந்து நடித்திருந்தார். இந்நிலையில், அடுத்ததாக இயக்குநர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் படம் மூலமாக நேரடியாக பாலிவுட்டில் அறிமுகம் ஆக உள்ளார் நயன்தாரா.


Click it and Unblock the Notifications











