தனுஷை ஜெர்மனி வார்த்தை பயன்படுத்தி திட்டிய நயன்தாரா.. Schadenfreude அப்படி என்றால் என்ன தெரியுமா?
சென்னை: நடிகர் தனுஷ் ஓம் நமச்சிவாயா என்றும் நல்லதே நினைங்க, நல்லதே நடக்கும் என ஆடியோ லாஞ்சில் ரசிகர்களிடம் போலி முகமூடியை போட்டுக் கொண்டு ஏமாற்றி வருகிறார் என்றும் உண்மையிலேயே அவருக்கு கொஞ்சம் கூட நல்ல எண்ணமே கிடையாது என்றும் அடுத்தவர்களின் வாழ்க்கையையும் வளர்ச்சியையும் பார்த்து பொறாமை மட்டுமே உள்ளது என விளாசியுள்ளார் நயன்தாரா.
2016ம் ஆண்டு நடைபெற்ற பிலிம்ஃபேர் விருது விழாவின் போது கூட நானும் ரவுடி தான் படத்தில் நடித்த நயன்தாராவின் நடிப்பை பாராட்ட தனுஷுக்கு மனமில்லை என்றும் தன்னை விட பிறர் முன்னேறி விட்டால் அவருக்கு பிடிக்காது என்றும் வெளுத்து வாங்கியுள்ளார்.

சிவகார்த்திகேயன், அமலா பால், சுசித்ரா, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உடன் விவாகரத்து என நடிகர் தனுஷை சுற்றி ஏகப்பட்ட சர்ச்சைகள் வெடித்து வரும் நிலையில், தற்போது நயன்தாரா இப்படி பொளந்துக் கட்ட பின்னணியில் வேறு ஏதாவது முக்கியக் காரணம் இருக்குமா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.
ஜெர்மனி வார்த்தையில் திட்டிய நயன்தாரா: இந்த ஆண்டு நடிகர் தனுஷ் இயக்குநராகவும் பிசியாகி ராயன் படத்தை இயக்கி நடித்து ஹிட் கொடுத்துள்ளார். அடுத்ததாக இட்லி கடை படத்தையும் இயக்கி முடித்து அடுத்த ஆண்டு வெளியிட காத்திருக்கிறார். நேற்று தனுஷின் குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது. இந்நிலையில், நயன்தாரா தனுஷுக்கு ஜெர்மனி வார்த்தையை அறிமுகப்படுத்துகிறேன் எனக்கூறி Schadenfreude என்கிற வார்த்தையை பயன்படுத்தி திட்டியுள்ளார். இந்தளவுக்கு நயன்தாரா தனுஷ் கேட்ட ராயல்டி தொகை 10 கோடிக்குத்தான் பொங்கியுள்ளாரா? இருவருக்கும் இடையே வேறு ஏதாவது பர்சனல் பிரச்சனைகள் உள்ளதா? என்கிற கேள்விகளும் கிளம்பியுள்ளன.

Schadenfreude என்றால் என்ன?: லேடி சூப்பர் ஸ்டார் என தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடி வரும் நடிகை நயன்தாரா நடிகர் தனுஷை Schadenfreude என்கிற வார்த்தையை குறிப்பிட்டு திட்டியுள்ள நிலையில், அந்த வார்த்தைக்கான அர்த்தம் என்னவென்றால், “மற்றவர்களின் துன்பத்தை பார்த்து சந்தோஷப்படுவது” எனக் குறிப்பிடுகின்றனர். நடிகர் தனுஷை இந்தளவுக்கு மோசமாக நயன்தாரா திட்டியது ஏன் என்றும் இருவருக்கும் இடையே அப்படி என்ன தனிப்பட்ட பகை என்றும் பலவிதமான கேள்விகளும் எழுந்துள்ளன.
விக்னேஷ் சிவனை காதலித்தது பிடிக்கவில்லையா?: நானும் ரவுடி தான் ஷூட்டிங் ஸ்பாட்டில் இயக்குநர் விக்னேஷ் சிவனை நடிகை நயன்தாரா காதலித்தது தனுஷுக்கு பிடிக்கவில்லையா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இன்று வரை ரசிகர்கள் கொண்டாடும் நானும் ரவுடி தான் படத்தை பற்றி தனுஷ் மோசமான விமர்சனங்களை அடுக்கினார் என்றும் நயன்தாரா குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தனுஷ் பதில் அளிப்பாரா?: நடிகர் தனுஷ் குறித்து நயன்தாரா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அடுக்கி வரும் நிலையில், இமான் சிவகார்த்திகேயன் பற்றி பேசும் போது அவர் எப்படி அமைதியாக கடந்து சென்றாரோ அதே போல தனுஷும் அமைதியாக கடந்து சென்று விடுவாரா? அல்லது நயன்தாராவுக்கு உடனடியாக பதில் அளிப்பாரா? இளையராஜா பயோபிக்கில் நடிக்க ஆரம்பித்த நிலையில், அவரை போலவே ராயல்டியில் கறாராக தனுஷும் மாறிவிட்டாரா? மாப்பிள்ளை, படிக்காதவன், பொல்லாதவன் என வரிசையாக ரஜினிகாந்தின் படங்களின் டைட்டிலில் தானே தனுஷ் நடித்தார் என்றும் நயன்தாரா ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











