நயன்தாரா விற்கும் 'கோலமாவு' எது தெரியுமா? - 'கோலமாவு கோகிலா' படத்தின் கதை!
Recommended Video

சென்னை : நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'கோலமாவு கோகிலா'. இப்படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்த்திருக்கிறது. அனிருத் இசை அமைக்க, சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்கிறார்.
'கோலமாவு கோகிலா' படத்தின் ஷூட்டிங் முடிந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் வெளிவந்த நிலையில், இரண்டாவது சிங்கிள் ட்ராக் விரைவில் வெளிவர இருக்கிறது. இந்தப் பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியிருக்கிறார்.

இப்படத்தின் கதை பற்றிய தகவல் வெளிவந்துள்ளது. நயன்தாரா இந்தப் படத்தில் போதைப் பொருள் விற்கும் பெண்ணாக நடித்திருக்கிறார். 'கோலமாவு' என்பது போதைப் பொருளுக்கான மறைமுகப் பெயர்.
மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்த நயன்தாராவுக்கு ஏற்படும் திடீர் சிக்கலைத் தீர்க்க நிறைய பணம் தேவைப்படுகிறது. அதற்காக போதைப்பொருள் விற்கும் தொழிலைச் செய்கிறார். போதைப் பொருளை பேக்கில் வைத்து யாருக்கும் சந்தேகம் வராதபடி விற்கிறார்.
போதைப் பொருள் விற்கு மிடில் கிளாஸ் குடும்பத்து பெண் சந்திக்கும் பிரச்னைகளை காமெடி, சென்டிமென்ட் கலந்து கமர்ஷியலாக இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார்கள். 'கோலமாவு கோகிலா' எந்த மாதிரியான படம் என்பதும் டைட்டிலுக்கான காரணம் என்ன என்பதும் இப்போது தெளிவாகியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











