இதுக்கு மேல வேற என்ன வேணும்.. குட்டீஸ் செய்த செயல்.. நெகிழ்ந்து போன நயன்தாரா!
சென்னை: தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சமீபத்தில் தனது 41வது பிறந்தநாளைக் கொண்டாடினார். வழக்கமான பிறந்த நாளை விட இந்த ஆண்டு பிறந்தநாள் நயன்தாராவுக்கு சிறப்பாக வாய்ந்த பிறந்த நாளாக அமைந்துள்ளது. அதற்கு காரணம், நயன்தாராவின் இரட்டை மகன்களான உலக் மற்றும் உயிரின் அன்பு நிறைந்த சர்பிரைஸ் பரிசு தான்.
நயன்தாரா சமூக வலைதளத்தில் பகிர்ந்த பிறந்தநாள் புகைப்படத் தொடர் ரசிகர்களின் இதயத்தை உருக வைத்துள்ளது. குறிப்பாக, அவரது மகன்கள் கையால் செய்து கொடுத்த 'World's Best Mom' என்று எழுதப்பட்ட பிறந்தநாள் வாழ்த்து அட்டை அனைவரையும் கவர்ந்துள்ளது.

நடிகை நயன்தாரா : கருப்பு உடையில் நயன்தாரா, இரட்டையர்களை அணைத்தபடி கண்ணாடி ஜன்னல் வழியாக வெளியில் காட்சியை ரசிக்கும் புகைப்படம் இன்டர்நெட்டில் பலரை ஈர்த்துள்ளது. மற்றொரு படத்தில், உலக் அல்லது உயிரில் ஒருவன் நயன்தாராவின் கன்னத்தில் முத்தமிடும் போட்டோவை பகிர்ந்து உள்ளார். அந்த தருணம் புகைப்படங்களை கண்ட ரசிகர்கள், தங்கள் அன்பை வெளிப்படுத்தி, கமென்ட் பகுதியில் இதய மற்றும் நெருப்பு எமோஜிகளை அள்ளித் தெளித்து வருகின்றனர்.
கைவசம் உள்ள படம்: நயன்தாரா கடைசியாக சித்தார்த் மற்றும் ஆர். மாதவன் உடன் இணைந்து 'டெஸ்ட்' திரைப்படத்தில் நடித்திருந்தார். சஷிகாந்த் இயக்கத்தில் உருவான இந்தத் திரைப்படம், ஏப்ரல் மாதம் நேரடியாக இணையத்தில் வெளியானது. அடுத்ததாக, யஷ் நடிப்பில் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் 'டாக்ஸிக்: எ ஃபேரிடேல் ஃபார் க்ரவுன் அப்ஸ்' படத்தில் நடித்து வருகிறார்.இப்படம் அடுத்த ஆண்டு திரையரங்குகளில் வெளிவர இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து, மம்மூட்டி மற்றும் மோகன்லால் உடன் 'பேட்ரியாட்' என்ற படத்திலும் நயன்தாரா நடிப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில், நடிகர் கவின் உடன் இணைந்து 'ஹை' என்ற தனது புதிய திட்டத்தையும் அறிவித்தார். இந்த அறிவிப்புடன், முதல் பார்வை போஸ்டர் வெளியாகி படத்தின் மீதாக எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும், சுந்தர் சி இயக்கும் 'மூக்குத்தி அம்மன் 2', 'ரக்காயி' மற்றும் 'NBK111' ஆகிய படங்கள் நயன்தாராவின் கை வசம் இருக்கிறது.


Click it and Unblock the Notifications











