Nayanthara: நயன்தாரா வீட்ல ஒரே விசேஷம் தான் போல.. உயிர், உலகத்தின் லேட்டஸ்ட் போட்டோக்களை பாருங்க!

சென்னை: நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் சினிமா, பிசினஸ் என படுபிஸியாக இருந்தாலும் தங்களது உயிர் மற்றும் உலகத்துடன் டைம் ஸ்பெண்ட் பண்ணுவதற்கும் ஏகப்பட்ட நேரத்தை ஒதுக்கி வருகின்றனர். சமீபத்தில், குழந்தைகளுடன் ஓணம் கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்ட நயன்தாரா தங்களுக்கு திருமணமாகி ஓராண்டு நிறைவு அடைந்ததையும் கொண்டாடியிருந்தார். இந்நிலையில், மீண்டும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தைகளின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

குழந்தைகளின் முகத்தை காட்டாமல் படுக்கை அறையில் அந்த இரண்டு குழந்தைகளும் தவழ்ந்து செல்லும் போட்டோக்களை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தனித்தனியாக இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவிட்டுள்ளனர்.

Nayanthara shares her twin sons latest photos

1000 கோடி கிளப்பில் இணைந்த நயன்தாரா: சமீபத்தில் அட்லி இயக்கத்தில் ஷாருக் கான், விஜய் சேதுபதி நடித்த ஜவான் திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகி இருந்தார் நயன்தாரா. அந்த படம் ஆயிரம் கோடி ரூபாயை வசூல் எட்டிய நிலையில் ரொம்பவே ஹேப்பி ஆகியுள்ளார்.

அடுத்ததாக, பிளாக் ஷீப் யூடியூப் சேனல் மூலம் பிரபலமான டியூட் விக்கி இயக்கத்தில் மண்ணாங்கட்டி எனும் படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா.

Nayanthara shares her twin sons latest photos

உயிர், உலகம் லேட்டஸ்ட் புகைப்படங்கள்: அந்தப் பக்கம் இயக்குநர் விக்னேஷ் சிவன் லவ் டுடே ஹீரோ இதை வைத்து புதிய படத்தை போதாக அறிவித்துள்ளார். மேலும், நயன்தாரா புதிதாக ஸ்கின் கேர் அழகு சாதன பொருட்களை அறிமுகப்படுத்த உள்ளார்.

எவ்வளவு தான் பிஸியாக இருந்தாலும் தங்கள் குழந்தைகளுக்கான நேரத்தை ஒதுக்கி செலவிட வேண்டும் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் ஒரு முடிவுடன் உள்ள நிலையில், அடிக்கடி குழந்தைகளுடன் பஞ்சு விளையாடும் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

Nayanthara shares her twin sons latest photos

இறைவன்: இந்த வாரம் அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள இறைவன் திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்த படத்திலும் நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ளார். ஏ சான்றிதழ் பெற்ற இந்த படத்திற்கு இன்ஸ்டாகிராமில் இதுவரை எந்த ஒரு புரோமோஷனையும் நயன்தாரா வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வாமணன், என்றென்றும் புன்னகை, மனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கிய அகமது இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த திரைப்படத்தில் விஸ்வரூபம் வில்லன் ராகுல் போஸ் சைக்கோ கொலைகாரனாக மிரட்டி உள்ளார். வரும் செப்டம்பர் 28ம் தேதி இறைவன் ரிலீஸ் ஆகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X