Nayan - Wikki: டேய் தம்பி! மகன்களோடு தந்தையர் தின அட்ராசிட்டி.. விக்னேஷ் சிவனை போட்டு படுத்துறாங்க போல
சென்னை: ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை உலகம் முழுவதும் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் பொதுமக்கள் தொடங்கி பிரபலங்கள் வரை என பலரும் தந்தையர் தினத்தை கொண்டாடி வருகிறார்கள். இப்படி இருக்கும்போது, இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இரண்டு மகன்களுடன் செம ஜாலியா விளையாடிக் கொண்டு தந்தையர் தினத்தை கொண்டாடுகிறார். அதிலும் அவரது இரட்டைக் குழந்தைகள் அவரைப் போட்டு பாடாய் படுத்து வாங்க போல எனக் கூறும் அளவுக்கு அவர்களின் அவரது மகன்களின் சேட்டை உள்ளது. இது தொடர்பான வீடியோவை நடிகையும் விக்னேஷ் சிவனின் மனைவியுமான நயன்தாரா சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழ் திரையுல பிரபலங்களில் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் தம்பதியருக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் நல்ல வரவேற்ப்பு உள்ளது. இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்பதில் இருந்து ரசிகர்களுக்கு இவர்களின் மீது நல்ல அபிப்ராயம் ஏற்பட்டுவிட்டது. இதனால் அவர்கள் என்ன செய்தாலும் அது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
விக்கி - நயன் இருவரும் திருமணம் செய்து கொண்ட சில மாதங்களுக்கு உள்ளாகவே, வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டனர். இதனால் அரசியல் ரீதியான பிரச்னை ஏற்பட்டதும், இவர்கள் இருவரும் தாலி கட்டி திருமணம் செய்வதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னரே பதிவுத் திருமணம் செய்து கொண்டது வெளியே தெரிந்தது. இவர்களின் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு உயிர் மற்றும் உலக் என பெயரிட்டார்கள்.

இரட்டை மகன்கள்: விக்னேஷ் சிவன் படங்கள் இயக்குவது மட்டும் இல்லாமல் பாடல்களும் நன்றாக எழுதுவார். ஜெயிலர் படத்தில் இடம் பெற்ற ரத்தமாரே பாடலை தனது மகன்களை மனதில் வைத்துதான் எழுதியதாக தெரிவித்தார். இந்த பாடலுக்காக சைமா விருதுகளையும் பெற்றார். இவரும் நயனும் அடிக்கடி தங்களது மகன்களுடன் இணைந்து வெளிநாடுகளுக்குச் சென்று செம ஜாலியாக ஊர் சுற்றி வருகிறார்கள். இது தொடர்பாக அவர்கள் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
ஓவர் சேட்டை: இந்நிலையில் இன்று அதாவது ஜூன் 15ஆம் தேதி உலகம் முழுவதும் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தந்தையர் தினத்தில் விக்னேஷ் சிவன் தனது இரண்டு மகன்களுடனும் செம ஜாலியாக விளையாடிக் கொண்டிருக்கிறார். அதுவும் தனது மகன்கள் இவரைப் போட்டு ஒரு வழி செய்கிறார்கள் என்று கூறும் அளவுக்கு இவர்களின் சேட்டை உள்ளது.
உயிர் செய்யும் சேட்டை: அதாவது இவர்களை விக்னேஷ் சிவன் டேய் தம்பி எனக் கூறினால், அவரது மகன் உயிர் உடனே திரும்பி டேய் தம்பி என்கிறார். அதேபோல், டேய் என்ன பேசவிடுடா என்று கேட்டால், உடனே பேச விடமாட்டேன் என்கிறார் உயிர். நான் பேசனும் நீ கேட்கனும் என விக்கி கூறினால், அதற்கும் உயிர், நீ கேட்கனும் நான் பேசனும் என்கிறார். மேற்கொண்டு, டேய் தம்பி சொல்றதைக் கேளு.. என்ன விளையாடுரையா? என்று கேட்டால் அதையும் திருப்பிச் சொல்லுகிறார். இந்த சம்பவம் நடைபெறும் போது நயன் அருகில் அமர்ந்து கொண்டு ஜாலியாக இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











