Nayanthara: என்ன நயன்தாரா கார் இப்படி ஆடுது.. இப்படியொரு கணவர் கிடைச்சா செம ஹேப்பி தான்!

சென்னை: பெண்களுக்கு எப்போதும் சின்ன சின்ன சர்ப்ரைஸ்களை கணவன்மார்கள் செய்தாலே ரொம்ப பிடிக்கும். அதிலும், இப்படியொரு சொகுசு காரை பிறந்தநாளுக்கு செம சர்ப்ரைஸாக பரிசாக அளித்தால் பிடிக்காதா என்ன? கடந்த மாதம் பிறந்தநாளை கொண்டாடிய நயன்தாராவுக்கு Maybach சொகுசு காரை பரிசாக வழங்கிய வீடியோவை தற்போது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

லேடி சூப்பர்ஸ்டார் என்கிற டைட்டிலே தனக்கு வேண்டாம் அதை வைத்திருப்பதால் திட்டுறாங்க என அன்னபூரணி படத்தின் புரமோஷனுக்காக அளித்த பேட்டியில் நயன்தாரா பேசியிருந்தார்.

ஆனால், அவரது ரசிகர்கள் இந்தியாவிலேயே நீங்க மட்டும் தான் லேடி சூப்பர்ஸ்டார் என ஆதரவு கொடுத்து கமெண்ட்டுகளை போட்டு ஹேப்பி ஆக்கினர்.

Nayanthara shares how Vignesh Shivan gifter Maybach for her birthday

39 வயது: நடிகை நயன்தாரா பிறந்து 39 வருடங்கள் ஆன நிலையில், கடந்த மாதம் நவம்பர் 18ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடினார். சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர். வருஷா வருஷம் வெளிநாடுகளுக்கு சென்று கணவனும் மனைவியும் மாறி மாறி பிறந்தநாளை கொண்டாடி வந்த நிலையில், இந்த ஆண்டு சென்னையிலேயே சர்ப்ரைஸ் கிஃப்ட் உடன் நயன்தாரா பர்த்டே கொண்டாடினார்.

சொகுசு கார்: மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனத்தின் Maybach கார் மாடல் சுமார் 3 கோடி மதிப்பில் விற்கப்பட்டு வரும் நிலையில், அந்த காரை சர்ப்ரைஸ் கிஃப்ட்டாக ஒரு இடத்தில் வைத்து வாணவேடிக்கை வெடிக்க எல்ஐசி படத்தின் ஹீரோ பிரதீப் ரங்கநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட பிறந்தநாள் பார்ட்டி நிகழ்வில் நயன்தாராவை அழைத்து வந்து அந்த கார் பரிசை வழங்கினார்.

வீடியோ வெளியீடு: நயன்தாரா தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் தனது கணவர் விக்னேஷ் சிவன் பரிசாக அளித்த கார் வீடியோவை வெளியிட்டு சந்தோஷத்தை வெளிப்படுத்தி உள்ளார். அந்த வீடியோவின் முதல் காட்சியில் கார் ஆடும் காட்சியை பார்த்து ரசிகர்கள் வித விதமான கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர். இப்படியொரு சர்ப்ரைஸ் கொடுக்கும் கணவர் கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும் என நயன்தாரா ரசிகைகள் எல்லாம் பெருமூச்சு விட்டு வருகின்றனர். லலித் குமார் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்க உள்ள எல்ஐசி படத்தில் பிரதீப் ஆண்டனி, க்ரித்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா நடிக்க உள்ளனர். அனிருத் இசையமைக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X