அம்பானி மகன் திருமணத்தில் மகேஷ் பாபு பக்கத்தில் நயன்தாரா.. பின் வரிசையில் சூர்யா, ஜோதிகா!
மும்பை: விருது விழா நிகழ்ச்சியில் கூட பாலிவுட் முதல் கோலிவுட் வரை இத்தனை சினிமா பிரபலங்களை ஒரே நேரத்தில் சந்திக்க முடியுமா என்பது ஆச்சரியமாகவே இருக்கும். ஆனால் அதை அசால்ட்டாக முகேஷ் அம்பானி தனது மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் நிகழ்த்திக் காட்டியுள்ளார்.
ஹாலிவுட் பிரபலங்கள் வரை கிரிக்கெட் வீரர்கள், சினிமா பிரபலங்கள் என பிரம்மாண்டமாக நடைபெற்ற திருமண விழாவில் தென்னிந்திய சினிமா பிரபலங்களும் இந்த முறை அதிக அளவில் பங்கேற்றனர்.

இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள ஒரே புகைப்படத்தில் இத்தனை பிரபலங்களா என ரசிகர்கள் ஆச்சரியத்தில் அந்த போட்டோவுக்கு லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர்.
மகேஷ்பாபு பக்கத்தில் நயன்தாரா: ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்ட் திருமணம் சமீபத்தில் மும்பையில் உள்ள ஜியோ சென்டரில் நடைபெற்றது. ரஜினிகாந்த், சூர்யா, மகேஷ் பாபு, ராம்சரண், நயன்தாரா, அட்லீ, பிருத்விராஜ் உள்ளிட்ட தென்னிந்திய பிரபலங்களும் அதில் கலந்து கொண்டனர். மகேஷ் பாபு அருகில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் அமர்ந்திருந்தபோது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
பின் வரிசையில் சூர்யா: தானா சேர்ந்த கூட்டம் படத்தை சூர்யாவை வைத்து இயக்கிய விக்னேஷ் சிவன் மகேஷ் பாபு அருகே அமர்ந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். முன் வரிசையில் மகேஷ் பாபு, விக்னேஷ் சிவன், நயன்தாரா அமர்ந்திருக்க, பின் வரிசையில் சூர்யா, ஜோதிகா உள்ளிட்ட பிரபலங்கள் அமர்ந்து போஸ் கொடுத்துள்ளனர்.
ஜெனிலியாவின் ஃபோகஸ்: அந்த போட்டோவில் கூட மகேஷ் பாபுவின் அழகை பார்த்து ஜெனிலியா ரசித்துக் கொண்டிருக்கும் காட்சியை ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். சூர்யாவின் மைண்ட் வாய்ஸ் என்னவா இருக்கும் என்றும் கமெண்ட்டுகள் அந்த போட்டோவுக்கு குவிந்து வருகின்றன.
மகேஷ் பாபு மனைவி லுக்: மகேஷ் பாபு அருகில் நயன்தாரா அமர்ந்திருப்பதை பார்த்து மகேஷ் பாபுவின் மனைவி நம்ரதா விடும் லுக்கையும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். சூர்யாவுக்கும் பின் வரிசையில் பிருத்விராஜ் அமர்ந்துள்ளார் என்றும் கலாய்த்து வருகின்றனர். ஆனால், இது நிஜமாவே ஒரு சூப்பரான பிக் தான் என்றும் கோலிவுட், டோலிவுட், மல்லுவுட் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் ஒரே க்ளிக்கில் சிக்கியுள்ளனர் என ரசிகர்கள் அதிக லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











