நயன், சிவகார்த்திகேயன், ராஜேஷ்.. கூட்டிக் கழிச்சுப் பாருங்க கணக்கு சரியா வரும்!
சிவகார்த்திகேயனின் 13வது படத்தில் நயன்தாரா நடிக்கிறார்.
சென்னை: சிவகார்த்திகேயனின் 13வது படத்தில் நயன்தாரா படப்பிடிப்பை தொடங்கியுள்ளார்.
குழந்தைகளுக்கு பிடித்த சமத்தான ஹீரோவாகிவிட்டார் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் சீமராஜா திரைப்படம் ரிலீஸூக்கு தயாராக உள்ளது.

நடிகர் சிவகார்த்திக்கேயன் இப்போது இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது அவருடைய 13வது திரைப்படமாகும். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார்.
சிவகார்த்திகேயனின் 13வது திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்போது நயன்தாரா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படுவதாக தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ க்ரீன் உறுதிபடுத்தியுள்ளது. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை வரவேற்கிறோம். அவருடைய படப்பிடிப்பு துவங்குகிறது என தெரிவித்துள்ளனர்.
நயன்தாராவின் நடிப்பில் கோலமாவு கோகிலா நாளை வெளியாக உள்ளது. வேலைக்காரன் திரைப்படத்திற்கு பிறகு சிவா நயன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளனர். அதேபோல் பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படத்திற்கு பிறகு இரண்டாவதாக ராஜேஷ் நயன்தாராவை இயக்குகிறார்.
இப்படத்தில், ராதிகா சரத்குமார், யோகிபாபு, ரோபோ ஷங்கர் மற்றும் பலர் நடிக்கின்றனர். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார். தினேஷ் கிருஷணன் ஒளிப்பதிவு செய்கிறார்.


Click it and Unblock the Notifications











