3 மோசமான குரங்குகள்.. அந்தணன், பிஸ்மி டீமை அசிங்கப்படுத்திய நயன்தாரா.. சம்பாதிச்சா சந்தோஷம்!
சென்னை: நடிகை நயன்தாரா திடீரென அளித்த பேட்டி ஏகப்பட்ட சர்ச்சைகளையும் பரபரப்புகளையும் மீண்டும் கிளப்பியுள்ளது. நடிகை நயன்தாரா சமீப காலமாக நார்த் இந்தியாவிலேயே அதிகம் தென்படுகிறார் என்கிற பேச்சுக்கள் அடிபட்டு வந்த நிலையில், நார்த் இந்தியா மீடியாவுக்கு திடீரென பிரத்யேக பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.
தனுஷ் பற்றியும் வலைப்பேச்சு யூடியூப் சேனல் பற்றியும் அவர் பேசியிருப்பது சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சினிமா செய்திகள் மற்றும் கிசுகிசுக்களை சொல்லி வரும் வலைப்பேச்சு யூடியூப் சேனலில் பேசி வரும் பத்திரிகையாளர்கள் மூவரையும் நடிகை நயன்தாரா குரங்கு என விமர்சித்துள்ளார்.

நடிகர் தனுஷையே ஜெர்மனி வார்த்தையில் திட்டிய லேடி சூப்பர் ஸ்டாருக்கு பத்திரிகையாளர்கள் எல்லாம் எம்மாத்திரம் என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
தனுஷ் விவகாரம்: தனுஷுக்கு எதிராக நடிகை நயன்தாரா அறிக்கை வெளியிட்ட நிலையில், அவருக்கு ஆதரவாக ஸ்ருதிஹாசன், பார்வதி, அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், நஸ்ரியா உள்ளிட்ட பல நடிகைகள் ஆதரவு தெரிவித்தனர். அந்த விவகாரத்தில் நயன்தாரா செய்தது தான் தவறு என்று தனுஷ் மீது தவறில்லை என அந்தணன், பிஸ்மி உள்ளிட்டோர் பேசியதால் நடிகை நயன்தாராவுக்கு அவர்கள் மீது கோபம் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
மூன்று மோசமான குரங்குகள்: கெட்டதை பார்க்காதே, கெட்டதை கேட்காதே, கெட்டதை பேசாதே என 3 குரங்குகள் பற்றி நமக்குத் தெரியும். ஆனால், கெட்டதை பார், கெட்டதை கேள், கெட்டதை மட்டுமே பேசு என சொல்லும் 3 மோசமான குரங்குகள் சினிமா கிசுகிசுக்களை பற்றி பேசியே வயிற்றை வளர்த்து வருகின்றனர் என நடிகை நயன்தாரா வலைப்பேச்சு டீமில் உள்ள அந்தணன், பிஸ்மி மற்றும் சக்திவேல் உள்ளிட்ட மூவரையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சம்பாதிச்சுட்டு போகட்டும்: அவங்க ஒரு 50 வீடியோ போட்டிருந்தால் அதில், என்னைப் பற்றி மட்டும் 45 வீடியோவில் பேசியிருப்பார்கள். ஏனென்றால், என்னைப் பற்றி பேசினால் தான் வியூஸ் வரும் அதை வைத்து காசு பார்க்கலாம் என தெரிந்து வைத்துள்ளனர். எப்படியோ என்னைப் பற்றி தப்பாக பேசி சம்பாதித்து சிலர் சாப்பிட்டால் அது கூட எனக்கு சந்தோஷம் தான் என்றும் அவங்க சம்பாதிச்சாலும் சரி, தனுஷ் சம்பாதிச்சாலும் சரி எனக்கு ஹேப்பி தான் என நயன்தாரா பேசியுள்ளார்.
முன்னதாக யோகி பாபு: இதற்கு முன் வலைப்பேச்சு டீம் குறித்து நடிகர் யோகி பாபு பேட்டி ஒன்றில் மோசமாக பேசியதால், தனியாக ஒரு வீடியோவையே வெளியிட்டு அவரை தாக்கி பேசியிருந்தனர். பல தயாரிப்பாளர்களை நடுரோட்டுக்கு கொண்டு வந்தவர் யோகி பாபு என்றும் கூறினர். இந்நிலையில், நயன்தாராவின் இந்த பேட்டிக்கும் அவர்கள் நிச்சயம் பதிலடி கொடுப்பார்கள் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இறங்கி அடிக்கும் நயன்தாரா: இதுவரை பொதுவெளியில் பேசவே யோசித்து வந்த நயன்தாரா சமீப காலமாக தன்னை எதிர்ப்பவர்களை தானும் இறங்கி அடிப்பேன் என தாறுமாறாக டிரான்ஸ்ஃபார்ம் ஆகியிருப்பதற்கு என்ன காரணம் என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அடுத்ததாக நயன்தாரா ராக்காயி எனும் படத்தில் ஆக்ஷன் லேடி சூப்பர் ஸ்டாராகவும் மாறி வருவது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட், மண்ணாங்கட்டி உள்ளிட்ட படங்கள் அவர் கைவசம் உள்ளன.


Click it and Unblock the Notifications











