நயன்தாரா மகன்கள் எப்படி வளர்ந்துட்டாங்க பாருங்க.. துபாயில் ஜாலி டூர்.. குவியும் லைக்ஸ்!

சென்னை: இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது குடும்பத்துடன் துபாய்க்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில், அங்கே விண்டோ வழியாக உயர்ந்த கட்டடங்களை எட்டிப் பார்க்கும் தனது இரு மகன்களை போட்டோ எடுத்து போஸ்ட் போட்டுள்ளார்.

மலையாளத்தில் சாதாரண டிவி தொகுப்பாளினியாக அறிமுகமான டயானா மரியம் குரியன் மலையாள படங்களில் நயன்தாராவாக நடிக்க ஆரம்பித்தார். ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

nayanthara vignesh shivan toxic

கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9ம் தேதி இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியினருக்கு உயிர் மற்றும் உலகம் என இரு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

படமே வரல: லேடி சூப்பர் ஸ்டார் என நயன்தாராவை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த நயன்தாரா மாயா, அறம், டோரா, நெற்றிக்கண், கனெக்ட், ஓ2, அன்னபூரணி உள்ளிட்ட பல படங்களில் கதையின் நாயகியாகவும் உமன் சென்ட்ரிக் படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு வெளியான அன்னபூரணி படம் சர்ச்சையை கிளப்பிய பின்னர் நயன்தாரா நடித்த எந்த படமும் இந்த ஆண்டு இதுவரை வெளியாகவில்லை. டெஸ்ட் படம் சம்மருக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த படமும் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. மண்ணாங்கட்டி, மூக்குத்தி அம்மன் 2 உள்ளிட்ட படங்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை.

nayanthara vignesh shivan toxic

எல்ஐகே எப்போ வரும்?: அஜித் குமாரின் 62வது படத்தின் வாய்ப்பை மிஸ் பண்ண இயக்குநர் விக்னேஷ் அதிரடியாக பிரதீப் ஆண்டனியை வைத்து எல்ஐகே படத்தை இயக்கி ஹிட் கொடுப்பார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு சில ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மட்டுமே இதுவரை வெளியாகி உள்ளன. பிரதீப் ரங்கநாதன் டிராகன் படத்தையே முடித்து ரிலீஸ் செய்து விடுவார் போல தெரிகிறது. ஆனால், விக்னேஷ் சிவன் எப்போது எல்ஐகே படத்தை வெளியிடுவார் என தெரியவில்லை.

துபாய் டூர்: அடிக்கடி தனது மனைவி நயன்தாரா மற்றும் இரு குழந்தைகளுடன் ஜாலியாக துபாய்க்கு டூர் கிளம்பி விடுகிறார் விக்னேஷ் சிவன். துபாயில் இருந்து எடுத்த புகைப்படங்களை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து தனது மனைவி நயன்தாராவையும் டேக் செய்துள்ளார்.

நல்லா வளர்ந்துட்ட உயிர், உலகம்: நடிகை நயன்தாராவின் மகன்களான உயிர் மற்றும் உலகம் இருவரும் நல்லா வளர்ந்துட்டாங்களே என அவர்களின் லேட்டஸ்ட் போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். லேடி சூப்பர் ஸ்டாரை எங்கே விக்கி காணோம். அவரோட லேட்டஸ்ட் போட்டோக்களை போடுங்க என்றும் கமெண்ட்டுகள் குவிகின்றன.

nayanthara vignesh shivan toxic

அப்பா மாதிரியே: அப்படியே விக்னேஷ் சிவனை உறித்து வைத்தது போல இரு மகன்களும் உள்ளனர் என்றும் திருஷ்டி சுத்திப் போடுங்க ரெண்டு குழந்தைகளும் செம க்யூட் என ரசிகைகள் பலரும் கண் வைத்து வருகின்றனர். நடிகை நயன்தாரா யஷ் நடிப்பில் உருவாகி வரும் டாக்ஸிக் படத்தில் அவருக்கு அக்காவாக நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விஜய்யின் கோட் படத்தில் சினேகாவுக்கு முன்னதாக நயன்தாரா தான் நடிக்க வேண்டியது என சமீபத்திய பேட்டி ஒன்றில் வெங்கட் பிரபுவும் ரிவீல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X