நயன்தாராவின் அடுத்த படம்...விறுவிறுப்பாக நடக்கும் ஷுட்டிங்
சென்னை : வரிசையாக அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா. ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படத்தில் நடித்து முடித்த கையோடு, புது பட வேலையை துவக்கி விட்டார் நயன்தாரா.
இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் ஷுட்டிங் சென்னையில் நடைபெற்று வருகிறது. இதுவும் நாயகியை மையமாகக் கொண்ட கேரக்டராம். இந்த படத்துடன் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திலும் நடித்து வருகிறாராம் நயன்தாரா.

வெங்கட் பிரபுவிடம் அசிஸ்டென்டாக பணியாற்றிய புதுமுக இயக்குனர் ஜிஎஸ் விக்னேஷ், ஒரு மாதத்திற்கு முன்பு நயன்தாராவை சந்தித்து இந்த படத்தின் கதையை கூறி உள்ளார். உடனே நயன்தாராவிற்கு பிடித்து விட்டதாம்.
நயன்தாரா ஓகே சொல்லி விட்டதால் உடனடியாக முழு கதையையும் ரெடி பண்ணிவிட்டாராம் டைரக்டர். 5 நாட்களுக்கு முன் சென்னையில் ஷுட்டிங்கையும் துவக்கி விட்டார் நயன்தாரா.
குடும்ப கதை என்றாலும், த்ரில்லர் கலந்த கதையாம். அடுத்த சில நாட்களுக்கு இந்த படத்தின் ஷுட்டிங் சென்னையில் தான் நடக்கிறதாம். அதற்கு பிறகு கோவை செல்ல உள்ளதாம் படக்குழு.
மாயா, கேம் ஓவர் படங்களுக்கு இசையமைத்த ரோன் எதன் யோகன் தான் இந்த படத்திற்கும் இசையமைக்கிறாராம். ஒளிப்பதிவை தமிழ் கவனிக்கிறார்.


Click it and Unblock the Notifications











