Nayanthara - யப்பா எத்தனை பிஸ்னெஸ்.. நயன்தாரா தொடங்கிய புதிய தொழில்.. லிஸ்ட் இதுதான்

சென்னை: Nayanthara New Business (நயன்தாராவின் புதிய தொழில்) நடிகை நயன்தாரா புதிய தொழில் ஒன்றை தொடங்கியிருப்பதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் தெரிவித்திருக்கிறார்.

தமிழ் சினிமாவிலிருந்து தனது திரை வாழ்க்கையை தொடங்கியவர் நயன்தாரா. அழகு மட்டுமின்றி திறமையும் கொண்டிருப்பதால் அவரை தமிழ் திரையுலகம் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறது. காதல் விவகாரங்களில் சிக்கி பல தனிப்பட்ட தாக்குதல்களை சந்தித்தவர் அவர். ஆனால் அதையெல்லாம் கண்டு அஞ்சாமல் ஃபீனிக்ஸ் பறவையாக மீண்டெழுந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார்.

Nayanthara Started New Business Here is the details

திருமணம்: நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது விக்னேஷ் சிவனை காதலித்த நயன்தாரா கடந்த வருடம் அவரை திருமணம் செய்துகொண்டார். பிறகு வாடகை தாய் மூலம் இரண்டு மகன்களை பெற்றுக்கொண்டனர். உயிர், உலக் என்று மகன்களுக்கு பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. திருமணம் செய்து குழந்தை பெற்றாலும் தனது நடிப்பு பயணத்தை தீவிரமாக தொடர்ந்துவருகிறார் நயன்தாரா. அவருக்கு விக்னேஷ் சிவனும் முழு சப்போர்ட் செய்துவருகிறார்.

ஹிந்தியில் என்ட்ரி: இத்தனை வருடங்கள் தமிழ், தெலுங்கில் கலக்கி அவர் தற்போது ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியில் என்ட்ரி ஆகியிருக்கிறார். அட்லீ இயக்கத்தில் உருவாகியிருக்கும் அந்தப் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்தார் இந்தப் படம் வெற்றி பெற்றால் பாலிவுட்டிலும் ஒரு பெரிய ரவுண்டு வரலாம் என்று கணக்கு போட்டிருந்தார். அவர் கணக்குபடி ஜவான் படம் பாலிவுட்டில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. எனவே அடுத்தடுத்து ஹிந்தி படங்களில் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Nayanthara Started New Business Here is the details

சஞ்சய் லீலா பன்சாலி: அந்தவகையில் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் நயன் நடிக்கவிருப்பதாகவும் அதற்கான பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் அதில் ரன்வீர் சிங் கதாநாயகனாக நடிக்கலாம் என்றும் தெரிகிறது. இந்நிலையில் நயன்தாரா ஒருபக்கம் சினிமாவில் பிஸியாக இருந்தாலும் பிஸ்னெஸ்ஸிலும் பிஸியாக இருக்கிறார்.

Nayanthara Started New Business Here is the details

புதிய தொழில்: அந்தவகையில் நயன் தாரா புதிய தொழில் ஒன்றை தொடங்கியிருக்கிறார். அதாவது Femi 9 என்ற சானிட்டரி நாப்கின் பிராண்ட் தொழிலை தொடங்கியிருக்கிறார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "இது ஒவ்வொரு பெண்ணின் வலிமை மற்றும் அழகுக்கான ஒரு அடையாளமாகும். பெண்களுக்கு அதிகாரமளிக்கும் இந்த முயற்சியை கொண்டாட என்னுடன் இணையுங்கள். ஒருவரையொருவர் ஆதரிப்போம் இணைந்து உயர்வோம்" என குறிப்பிட்டிருக்கிறார். முன்னதாக 9 ஸ்கின், லிப்பாம் கம்பெனி ஆகிய தொழில்களை செய்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X