அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு.. இந்த நேரத்தில் தொக்கா மாட்டிய நயன்தாரா.. கிளம்பிய எதிர்ப்பு!
சென்னை: வரும் ஜனவரி 22ம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் இருந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எல்லாம் கலந்து கொள்கிறார். இந்நிலையில், ராமர் அசைவ பிரியர் என லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் அன்னபூரணி படத்தில் இடம்பெற்ற வசனங்களுக்கு எதிராக நயன்தாரா மீது மும்பை காவல் நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டயானா மரியம் குரியனான நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். அடிக்கடி திருப்பதி உள்ளிட்ட கோயில்களுக்கு சென்று வரும் நயன்தாரா தன்னை ரொம்பவே பக்திமானாக காட்டி வரும் நிலையில், இந்துக்களின் மத நம்பிக்கையை புண்படுத்தும் விதமாகவும் லவ் ஜிகாத்தை வளர்க்கும் விதகாவும் உள்ள அன்னபூரணி படத்தில் எப்படி நடித்தார் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

தொடர் தோல்வி: லேடி சூப்பர் என சினிமாவில் தொடர்ந்து போட்டுக் கொண்டு வரும் நயன்தாரா நடிக்கும் படங்கள் தொடர்ந்து படுதோல்வியை சந்தித்து வருகின்றன. கடைசியாக அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் படம் மட்டுமே நயன்தாராவை காப்பாற்றியது. ஆனால், கடந்த 2021ல் இருந்து நயன்தாரா நடித்த நிழல், நெற்றிக்கண், ஆறாடுகுலா புல்லட், அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல், ஓ2, காட் ஃபாதர், கோல்டு, கனெக்ட், இறைவன் மற்றும் அன்னபூரணி என பல படங்கள் தோல்வியடைந்துள்ளன. அடுத்து டெஸ்ட் மற்றும் மண்ணாங்கட்டி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா.
நயன்தாரா மீது வழக்கு: இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநராக இருந்த நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நயன்தாரா நடித்த 75வது படமான அன்னபூரணி தியேட்டரில் வெளியாகி ஓடவில்லை. ஓடிடியில் சமீபத்தில் வெளியான நிலையில், அந்த படத்தை பார்த்த ராம பக்தர்கள் ராமர் அசைவ பிரியர் என்றும் பிராமண வீட்டுப் பெண் அதுவும் கோயிலுக்கு பிரசாதம் செய்துக் கொடுக்கும் நபரின் மகள் அசைவம் சமைப்பது, சாப்பிடுவது மற்றும் இஸ்லாமியரான ஜெய்யை காதலிப்பது என அமைக்கப்பட்ட திரைக்கதையில் எப்படி நடித்தார் என்கிற சர்ச்சை வெடித்துள்ளது. இந்து அமைப்பினர் நயன்தாரா, ஜெய், இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா மற்றும் படத்தின் தயாரிப்பாளர் உள்ளிட்டோர் மீது மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. அயோத்தி ராமர் கோயில் திறக்கும் நேரத்தில் இந்த வழக்கில் நயன்தாரா வசமாக சிக்கி உள்ளார் என்றும் அவருக்கு எதிராக வட இந்தியாவில் கடும் எதிர்ப்புகள் கிளம்பி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











