சிக்குவார்களா நயன்தாரா-விக்கி?..நாளை வெடிக்கப்போகும் குண்டு..சாதகமா?..பாதகமா?
சென்னை: நயன்தாரா வாடகைத்தாய் மூலம் குழந்தைப்பெற்றதில் விதிமீறல் இருக்கிறதா? அவர் சிக்குகிறாரா?
வாடகைத்தாய் விவகாரத்தில் அரசு விசாரணை நடத்தியுள்ளதாகவும் ஒரு நாள் பொறுத்துக்கொள்ளவும் அனைத்துக்கும் விடை கிடைக்கும் என அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்தார்.
நாளை வரப்போகும் அரசின் அறிக்கை நயன் விக்கிக்கு சாதகமாக அமையுமா? பாதகமாக அமையுமா ? என்பது தெரியவரும்.

நயன் விக்கி திருமணம்
தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் நடிக்கும் நயன்தாரா தமிழ் நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை ஆவார். லேடி சூப்பர் ஸ்டார் என்கிற பட்டத்துடன் புகழின் உச்சியில் இருக்கும் நயன்தாரா பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினாலும் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்ட நடிகை இவர்தான். இவரும் இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர்.

வாடகைத்தாய் மூலம் இரட்டைக்குழந்தை
திருமணத்திற்கு பின் இருவரும் படபிடிப்பில் மும்மூரமாயினர். இடையில் வெளிநாடுகளில் ஹனிமுன் கொண்டாடி படங்களை வெளியிட்டனர். நயன் 40 வயதை நெருங்கும் நிலையில் எப்போது குழந்தைப் பெற்றுக்கொள்வார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் அக்.9 ஆம் தேதி வாடகைத்தாய் மூலம் இரட்டைக்குழந்தைகளுக்கு தாயானார் நயன் என அறிவித்தார் விக்னேஷ். இதனால் ஊடக உலகில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. வாடகைத்தாய் சட்டம் பற்றி ஒரு நடிகை எடுத்து போட அதன் மீதான விவாதம் பெரிதானது.

வாடகைத்தாய் சட்டமும் அமைச்சர் விளக்கமும்
வாடகைத்தாய் சட்டம் ஜனவரி 2022 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நிலையில் நயன் விக்கி விதிமீறலில் ஈடுபட்டனர் என்கிற வாதம் வைக்கப்பட்டது. அமைச்சர் மா.சுவிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் இதுகுறித்து அவர்களிடம் விளக்கம் கேட்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இதற்கிடையே ஃபிலிமிபீட் சார்பில் சட்ட நிபுணர் ரமேஷிடம் எடுக்கப்பட்ட பேட்டியில் வாடகைத்தாய் சட்டம் குறித்து தெளிவாக விளக்கம் பெறப்பட்டது.
வாடகைத்தாய் சட்டம் ஜனவரி 2022 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டாலும் அதற்கான விதிகள் அறிவிக்கப்பட்டு போர்டு, அத்தாரிட்டி உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டப்பின்னரே சட்டம் அமலானதாக கருதப்படும், அதற்கு இடைப்பட்ட காலத்தில் சட்டத்தில் சொல்லப்படும் விதி மீறல் சம்பந்தப்பட்டவர்களை கட்டுப்படுத்தாது, ஆகவே நயன் விக்கியை கட்டுப்படுத்தாது என அரசியமைப்புச் சட்டம் சொல்வதை விளக்கியிருந்தார். அதன் பின்னர் அதன் அடிப்படையில் ஊடகங்கள் இதை வெளியிட்டன. ஆனாலும் நயன் விக்கியிடம் விளக்கம் கேட்க கமிட்டி அமைக்கப்பட்டது.

நயன் விக்கி விளக்கமும் அமைச்சர் பேட்டியும்
தாங்கள் 2016 ஆம் ஆண்டே பதிவு திருமணம் செய்துள்ளோம், வாடகைத்தாய் விவகாரத்தில் டிசம்பர் 2021 ஆம் ஆண்டு பதிவு செய்தோம் எந்த விதிமீறலிலும் தாங்கள் ஈடுபடவில்லை என்று விளக்கம் அளித்ததாக தெரிவித்திருந்தனர். இதனிடையே மருத்துவமனையிலும் விசாரணை நடத்தப்பட்டது. இதுகுறித்து இன்று காலை பேட்டி அளித்த அமைச்சரிடம் கேட்கப்பட்டபோது அவர் இதுகுறித்து முழுமையான அறிக்கை நாளை மாலை விரிவாக அரசு அளிக்கும் என்று தெரிவித்தார். துணைக்கேள்வி கேட்ட செய்தியாளர்களிடம் பொறுங்க நாளை மாலை முழுதுமாக அறிக்கையில் அனைத்து விவரங்களும் கிடைக்கும் என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











