சிம்புவுடனான காதல்.. ரொம்ப மோசம்.. அவரை விசாரிக்கவே இல்லை.. ஆவணப்படத்தில் மனம் திறந்த நயன்தாரா
சென்னை: நயன்தாரா பற்றிய Nayanthara Beyond The Fairy Tale ஆவணப்படம் அவரது பிறந்தநாளை முன்னிட்டு இன்று முதல் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமாக ஆரம்பித்திருக்கிறது. ஏற்கனவே இந்த டாக்குமெண்ட்ரியால் நயனுக்கும் தனுஷுக்கும் மோதல் ஆரம்பித்திருக்கிறது. அது பெரும் சர்ச்சையான சூழலில்; இந்த ஆவணப்படத்தில் தனது முந்தைய காதல் பற்றி இத்தனை வருடங்கள் கழித்து முதன்முறையாக மனம் திறந்து பேசியிருக்கிறார் நயன்தாரா.
கேரளாவில் பிறந்து மலையாள சினிமா மூலம் திரைத்துறைக்குள் வந்த நயன்தாரா தமிழில் ஐயா படத்தில் அறிமுகமானார். முதல் படமே கவிதாலயா பேனரில் அவர் அறிமுகமானார். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. மேலும் நயனுக்கும் அந்தப் படத்தில் நல்ல பெயர்தான் கிடைத்தது. முக்கியமாக அவருக்கு கோலிவுட்டில் வளமான எதிர்காலம் இருப்பதாக ஆரூடம் கூறப்பட்டது. அந்த ஆரூடம் பலிக்கும்படியாக தமிழில் அவர் ஐயா படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே ரஜினிக்கு ஜோடியாக சந்திரமுகி படத்தில் ஹீரோயினாக கமிட்டானார்.

முன்னணி நடிகை: சந்திரமுகியும் மெகா ஹிட்டடித்தது. முதல் இரண்டு படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்ததால் நயன்தாராவுக்கு வரிசையாக தமிழில் வாய்ப்புகள் கொட்டின. அதனை சரியாக பயன்படுத்தி தேவையான இடத்தில் கிளாமர், தேவையான இடத்தில் நல்ல நடிப்பு என வெரைட்டி காண்பித்து முன்னணி கதாநாயகியாக குறுகிய காலத்திலேயே முன்னேறினார். தொடர்ந்து விஜய், அஜித், சிம்பு, தனுஷ் என பலருடன் இணைந்து நடித்து தனக்கென மார்க்கெட்டை உருவாக்கிக்கொண்டார்.
சிம்புவுடன் காதல்: சூழல் இப்படி இருக்க வல்லவன் படத்தில் சிம்புவுடன் இணைந்து நடித்தார் நயன். அப்போது அவர்கள் இருவருக்குமிடையே காதல் மலர்ந்தது. இரண்டு பேரும் திருமணம் செய்துகொள்வார்கள் என்றும்; அவர்களுக்காக சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் பல கோடி ரூபாய் மதிப்பில் பங்களா வாங்கியிருக்கிறார் என்றெல்லாம் அப்போது திரைத்துறையில் பேச்சு எழுந்தது. ஆனால் திடீரென அவர்களுக்கிடையேயான காதல் பாதியில் முடிந்தது. அதற்கு காரணம் நயனுடன் தனிமையில் இருந்த புகைப்படங்களை சிம்பு வெளியிட்டதுதான் என்று கூறப்பட்டது.
விக்னேஷ் சிவனுடன் காதல்: சிம்புவுடனான காதல் முறிவுக்கு பிறகு சில காலம் சிங்கிளாக இருந்த நயன்; அடுத்ததாக பிரபுதேவாவை காதலித்தார். அந்தக் காதலும் பாதியில் முடிந்தது. இப்படி இரண்டு காதல் தோல்விகளை அவர் சந்தித்திருக்கிறார். அந்த சமயத்தில் அவர் மீதுதான் பலரும் விமர்சனம் வைத்தார்கள். பிறகு இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்டு செட்டிலாகியிருக்கிறார். அவர்களுக்கு உயிர், உலக் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
ஆவணப்படம்: இந்நிலையில் நயன்தாரா பற்றிய ஆவணப்படம் Nayanthara Beyond The Fairy Tale என்ற பெயரில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு இன்று நெட்ஃப்ளிக்ஸில் ஸ்ட்ரீமாக ஆரம்பித்திருக்கிறது. இதனை இயக்குநர் கௌதம் மேனன் இயக்கியிருக்கிறார். ஒருமணி நேரம் 22 நிமிடங்கள் ஓடக்கூடிய அந்த ஆவணப்படத்தில் நயன்தாரா, அவரது தாய், அவரை அறிமுகப்படுத்திய இயக்குநர் என பலரும் நயன் பற்றி பேசுகிறார்கள். இதில் தனது முந்தைய காதல் பற்றியும் மனம் திறந்து பேசியிருக்கிறார் நயன்.
முதல் காதல்: அவர் தனது முதல் காதல் பற்றி பேசுகையில், "என்னுடைய முதல் காதல் முழுக்க முழுக்க நம்பிக்கையின் அடிப்படையில் இருந்தது. அது மட்டும்தான் இருவருக்குமிடையே நல்ல ரிலேஷன்ஷிப்பை வைத்திருக்கும். காதலை தாண்டியும் நம்பிக்கை வேண்டும். எதிரில் இருக்கும் நபர் நம்மை முழுதாக காதலிக்கிறார் என்பதை நம்ப வேண்டும். நான் எப்போதும் அப்படித்தான் இருந்திருக்கிறேன். என்னுடைய முந்தைய காதல்கள் பற்றி இதுவரை பேசியதில்லை. எல்லோரும் நிறைய விஷயங்களை அவர்களே நினைத்துக்கொள்வார்கள்.
ரொம்ப மோசம்: எந்தக் கதையை அவர்கள் நம்ப வேண்டும் என்று நினைக்கிறார்களோ அதைத்தான் அவர்கள் நம்புவார்கள். அந்தக் கதை எல்லாம் ரொம்பவே மோசம். என்னுடைய மனதை காயப்படுத்தியது என்னவென்றால், 'என்ன ஏது என்றுகூட விசாரிக்காமல் என்னை பற்றிய கதைகளில் அவர்களாகவே ஒன்றை நினைத்துக்கொண்டதுதான். இன்றுவரை எனது ரிலேஷன்ஷிப்பில் சம்பந்தப்பட்ட ஆண்களிடம் சென்று, 'நீங்கள் ஏன் இதை செய்தீர்கள், உண்மையில் என்ன நடந்தது?' என்று கேட்டதே இல்லை. எப்போதும் ஒரு பெண்ணை மட்டும்தான் கேட்பார்கள். இது நியாயமே இல்லை" என்றார்.


Click it and Unblock the Notifications











