பிரபுதேவாவையும் விட்டுவைக்காத நயன்தாரா?.. ஆவணப்படத்தில் பரபரப்புக்கு பஞ்சமில்லை.. வெளியான சீக்ரெட்

சென்னை: நயன்தாராவின் வாழ்க்கை பயணத்தை வைத்து Nayanthara Beyond The Fairy Tale என்ற ஆவணப்படம் தயாராகியிருக்கிறது. கௌதம் மேனன் இயக்கியிருந்த அந்த டாக்குமெண்ட்ரி நயனின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமாக ஆரம்பித்திருக்கிறது. அதில் பேசும் நயன்தாரா தனது வாழ்க்கையில் நடந்த சில கசப்பான விஷயங்களை பற்றி முதன்முறையாக மனம் திறந்து பேசியிருப்பது கவனத்தை ஈர்த்திருக்கிறது.

தமிழில் ஐயா படத்தில் அறிமுகமான நடிகை நயன்தாரா குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார். எப்படி சிறிது காலத்திலேயே முன்னணிக்கு வந்தாரோ அதேபோல் அவ்வளவு சர்ச்சைகளையும் சீக்கிரமாகவே சந்தித்தார். முக்கியமாக முதலில் வல்லவன் படத்தில் நடித்தபோது சிம்புவை காதலித்தார். அந்த சமயத்தில் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. அதனையடுத்து இருவருக்குமான காதல் முறிவில் முடிந்தது.

nayanthara vignesh shivan

பிரபுதேவாவுடன் காதல்: சிம்புவுடனான பிரேக்கப்புக்கு பிறகு தொடர்ந்து நடித்துவந்த அவர் பிரபுதேவா இயக்கத்தில் வில்லு படத்தில் நடித்தார். அந்தப் படத்தில் நடித்தபோது பிரபுதேவாவை காதலித்தார். பிரபுதேவா ஏற்கனவே ரமலத் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்திருந்தார். அதனால் நயன் - பிரபுதேவா காதல் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் நயனை அந்த விஷயத்தில் பலரும் கடுமையாக விமர்சனம் செய்தார்கள். ரமலத்தும் நயனை நேரில் சந்தித்து கோபப்பட்டு பேசியதாக தகவல்கள் வெளியாகின.

மதம் மாறிய நயன்: இருந்தாலும் பிரபுதேவா மீதான காதல் நயன்தாராவுக்கு துளியும் குறையவில்லை. அவருக்காக தனது தாய் மதமான கிறிஸ்தவத்திலிருந்து இந்து மதத்துக்கு மாறினார். மேலும் பிரபுதேவாவின் பெயரை தனது கைகளில் பச்சையும் குத்திக்கொண்டார். இதன் காரணமாக இரண்டு பேரும் நிச்சயம் திருமணம் செய்துகொள்வார்கள் என்று ஒட்டுமொத்த தமிழ்நாடும் எதிர்பார்த்தது. இரண்டு பேருமே ஜோடியாக நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவும் செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரேக்கப்: அதுமட்டுமின்றி பிரபுதேவாவுடன் காதலில் இருந்தபோதுதான் சினிமாவிலிருந்து ஒதுங்க முடிவு செய்து அதன்படியே செய்தார் நயன். ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை இரண்டு பேருக்குமான காதலும் பிரேக்கப்பில் முடிந்தது. அதனையடுத்து சிங்கிளாக இருந்த அவர்; நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு உயிர், உலக் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

ஆவணப்படம்: இந்நிலையில் இன்று அவர் தனது 40ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதனையொட்டி Nayanthara Beyond The Fairy Tale என்ற பெயரில் ஆவணப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமாக ஆரம்பித்திருக்கிறது. அதில் தனது வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களை ஓபனாக பேசியிருக்கிறார் அவர். அந்தவகையில் அவர் பேசியிருக்கும் விஷயம் ஒன்று ரசிகர்களிடையே வெகுவாக கவனத்தை ஈர்த்திருக்கிறது.

என்ன பேசினார்?: அவர் பேசுகையில், "நான் சீதையாக நடித்ததுதான் கடைசி படமாக இருந்தது. அந்த கடைசி ஷாட் எடுக்கும்போது எனக்கு ஒருமாதிரி இருந்தது. ஏனெனில் எனக்கு எல்லாமே சினிமாதான். இனி படங்களில் நடிக்கக்கூடாது என்ற முடிவை நான் எடுக்கவில்லை. அந்த நபர்தான் என்னிடம் சொன்னார். அவர் எனக்கு சாய்ஸே தரவில்லை. வேலை செய்யக்கூடாது என்று சொன்னார். நானும் வேறு வழியில்லாமல் ஒத்துக்கொண்டேன். ஆனால் அது தவறு என்று பின்னால் உணர்ந்துகொண்டேன். அதுமட்டுமின்றி தவறான நபரை நம்பிவிட்டோமே என்ற கவலையும் இருந்தது. இருந்தாலும் பரவாயில்லை என்று எனது மனதை தேற்றிக்கொண்டேன்" என்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள், அந்த நபர் என்று நயன் சொல்வது பிரபுதேவாவைத்தான். இந்த டாக்குமெண்ட்ரியில் சிம்புவையும், பிரபுதேவாவையும் அவர் விட்டுவைக்கவில்லையே என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X