அந்த விஷயத்துல அஜித், ரஜினியை அடிச்சிக்கவே முடியாது.. நயன்தாரா சொன்ன ’நச்’ தகவல்!

சென்னை: அஜித் மற்றும் ரஜினிகாந்த் இடையே இருக்கும் ஒரு நல்ல குணத்தை பற்றி நடிகை நயன்தாரா பேசிய த்ரோபேக் வீடியோவை அஜித் ரசிகர்கள் ஷேர் செய்து டிரெண்ட் செய்து வருகின்றனர்.

சந்திரமுகி படம் தொடங்கி குசேலன், தர்பார், அண்ணாத்த வரை பல படங்களில் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடித்துள்ளார் நயன்தாரா.

அதே போல அஜித்துடன் பில்லா, ஆரம்பம், ஏகன் உள்ளிட்ட படங்களில் இணைந்த நயன்தாரா கடைசியாக விஸ்வாசம் படத்திலும் நடித்தார்.

மீண்டும் அஜித்துடன்

மீண்டும் அஜித்துடன்

சரத்குமாரின் ஐயா திரைப்படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான நயன்தாரா பல தடைகளை கடந்து பல வெற்றிகளை கொடுத்து கோலிவுட்டின் லேடி சூப்பர்ஸ்டாராக மாறி உள்ளார். விஸ்வாசம் படத்தை தொடர்ந்து மீண்டும் அஜித்தின் ஏகே 62 படத்தில் நயன்தாரா இணையப் போவதாக தகவல்கள் வெளியான நிலையில், நயன்தாராவின் த்ரோபேக் வீடியோக்களை அஜித் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

அந்த ஒற்றுமை

அந்த ஒற்றுமை

விஸ்வாசம் படம் வெளியாகும் சமயத்தில் நடிகை நயன்தாரா அளித்த அந்த த்ரோபேக் பேட்டியில் அஜித் மற்றும் ரஜினி இருவரும் பெண்களை கண்டால் எழுந்து நின்று தான் பேசுவார்கள். பெண்கள் என்பதற்காக அலட்சியம் செய்ய மாட்டார்கள். அந்த அளவுக்கு பெண்களுக்கு இருவரும் மரியாதை கொடுப்பார்கள் என பேசியுள்ளார்.

கம்ஃபர்டபிள் இருக்கும்

கம்ஃபர்டபிள் இருக்கும்

அஜித் சாரோட நான் வொர்க் பண்ணும் போது, ஓ நான் அஜித் சார் கூட வொர்க் பண்றேன்னு இல்லாமல், ரொம்பவே சாதாரணமாக இருப்பார். அந்த கம்ஃபர்டபிள் எனக்கு கிடைக்கும். அதுதான் சொல்றேன் அஜித் சாரா இருக்கட்டும் ரஜினி சாரா இருக்கட்டும் இவங்க ரெண்டு பேரும் இவ்ளோ பெரிய நடிகராக இருக்க காரணமே பொண்ணுங்கன்னா அவ்ளோ மரியாதை கொடுப்பாங்க என பேசியுள்ளார்.

விஜய்யை விமர்சித்து

விஜய்யை விமர்சித்து

இந்த த்ரோபேக் வீடியோ பேட்டியின் ஒரு சிறிய க்ளிப்பை போட்டு அஜித் மற்றும் ரஜினி மட்டுமே பொண்ணுங்களுக்கு மரியாதை கொடுப்பாங்கன்னு நயன்தாரா சொல்கிறார். விஜய்யை அவர் இதில், குறிப்பிடவில்லை என அஜித் ரசிகர்கள் விஜய் ரசிகர்களுடன் சண்டை செய்து வருகின்றனர். நடிகை நயன்தாரா விஜய்யுடன் சிவகாசி, வில்லு, பிகில் உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளார். அப்போதெல்லாம் நடந்த பேட்டிகளில் விஜய் பற்றி வெகு சிறப்பாக அவர் பாராட்டி பேசியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended Video

Vignesh Shivan -கு Propose செய்த Nayanthara | Valentines Day, Arabic Kuthu
இன்னும் அறிவிக்கல

இன்னும் அறிவிக்கல

அஜித்துக்கு ஜோடியாகும் நடிகையை விஜய் ரசிகர்கள் கிண்டல் செய்வதும், விஜய்க்கு ஜோடியாகும் நடிகையை அஜித் ரசிகர்கள் கிண்டல் செய்வதும் தங்களுக்கு பிடித்த ஹீரோக்களுக்கு ஜோடியாகும் நடிகைகளை கொண்டாடுவதையும் ரசிகர்கள் தொடர்ந்து செய்து வருகின்றனர். நேற்று வெளியான ஏகே 62 படத்தின் அறிவிப்பில் லைகா தயாரிப்பு நிறுவனம் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கிறார் என்றும் அனிருத் இசை அமைக்கிறார் என்றும் அறிவித்த நிலையில், ஹீரோயின் நயன்தாரா என்பதை அவர்கள் இன்னமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X