சுல்தான் படத்தயாரிப்பு நிறுவனத்துடன் மீண்டும் கைகோர்க்கும் நடிகை நயன்தாரா!
சென்னை : நயன்தாராவின் நடிப்பில் உருவாகியிருக்கும் நெற்றிக்கண் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளது.
நானும் ரவுடி தான் வெற்றியை தொடர்ந்து மீண்டும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் கார்த்தியின் சுல்தான் படத்தை பிரம்மாண்டமாக தயாரித்திருந்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் அடுத்தடுத்து இரண்டு படங்களில் நயன்தாரா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஹைதராபாத்தில் படப்பிடிப்பு
சந்திரமுகி, தர்பார் ஆகிய படங்களை தொடர்ந்து மீண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக அண்ணாத்த படத்தில் நடிகை நயன்தாரா நடித்து வருகிறார் . இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாகவே ஹைதராபாத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, மீனா ஆகியோரும் நடிக்கின்றனர்.

நெற்றிக்கண்
மூக்குத்தி அம்மன் நேரடியாக ஓடிடியில் வெளியானதைத் தொடர்ந்து நயன்தாராவின் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண் படமும் நேரடியாக ஓடிடியில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் இப்படத்தை நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை அறிமுக இயக்குனர் மிலிந்த் இயக்கியுள்ளார்.
Recommended Video

இசையை மையமாகக் கொண்டு
2015ல் சென்சேஷனல் ஹிட்டை கொடுத்த இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் அதன்பிறகு கடந்த 6 ஆண்டுகளாக எந்த ஒரு படத்தையும் இயக்கவில்லை. அடுத்த படத்திற்கான கதையில் மும்முரமாக இறங்கி இருக்க இப்பொழுது "பாட்டு" என்ற படத்தை இயக்கி இசை அமைத்து இசையமைப்பாளராகவும் அறிமுகமாகிறார். முழுக்க இசையை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் பகத் பாசில் ஹீரோவாக நடிக்க ஹீரோயினாக நடிகை நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்
இதுதவிர விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திலும் நயன்தாரா நடித்து வர குறைந்த பட்ஜெட்டில் பல தரமான திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வரும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் அடுத்தடுத்து இரண்டு படங்களில் நயன்தாரா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் ஒரு படத்தை வெங்கட்பிரபுவிடம் இணை இயக்குனராக பணியாற்றிய விக்னேஷ் இயக்க உள்ளார். இப்படத்தில் நயன்தாரா நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது. கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் நயன்தாரா ஏற்கனவே காஷ்மோரா படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











