Suriya 39: சூர்யா ஜோடியாக நடிக்கும் நயன்தாரா?

By Siva

சென்னை: சூர்யா 39 படத்தின் ஹீரோயினாக நயன்தாரா நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

விஸ்வாசம் படத்தை அடுத்து சிவா சூர்யாவை வைத்து படம் எடுக்கிறார். இந்த படத்தை ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில் சிவா நயன்தாராவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோரிக்கை

கோரிக்கை

விஸ்வாசம் படத்தை அடுத்து சூர்யா 39 படத்திலும் நீங்க தான் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்று சிவா நயன்தாராவிடம் கோரிக்கை விடுத்துள்ளாராம். நயன்தாரா இது குறித்து விரைவில் தனது முடிவை தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நயன்தாரா

நயன்தாரா

நயன்தாரா ஏற்கனவே கஜினி, ஆதவன், மாஸ் ஆகிய படங்களில் சூர்யாவுடன் நடித்துள்ளார். சிவா இயக்கத்தில் மீண்டும் நடிக்க ஒப்புக் கொண்டால் அவர் நான்காவது முறையாக சூர்யாவுடன் சேர்ந்து நடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை

மும்பை

நயன்தாரா தற்போது மும்பையில் நடந்து வரும் தர்பார் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். கஜினி படத்திற்கு பிறகு அவர் 14 ஆண்டுகள் கழித்து தற்போது தான் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார்.

காப்பான்

சூர்யா காப்பான் பட பாடல் ஒன்றை படமாக்க இந்தோனேசியாவில் உள்ள ஜாவா தீவுக்கு சென்றுள்ளார். அதன் பிறகு அவர் சுதா கொங்கராவின் இயக்கத்தில் சூரரைப் போற்று படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்வார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X