கமலுக்கு 'நோ', ரஜினிக்கு 'ஓகே' சொன்ன நயன்தாரா
Recommended Video

சென்னை: ஏ.ஆர். முருகதாஸ் ரஜினிகாந்தை வைக்கும் இயக்கும் படத்தில் நடிக்க நயன்தாரா ஒப்புக் கொண்டுள்ளாராம்.
பேட்ட படத்தை அடுத்து ரஜினிகாந்த் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. படப்பிடிப்பு இந்த மாதம் துவங்கும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் 10ம் தேதி துவங்கும் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

ஹீரோயின்
ரஜினிகாந்த் ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவராத்தை நடந்து வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில் படத்தில் நடிக்க நயன்தாரா ஒப்புக் கொண்டுள்ளாராம். இந்தியன் 2 படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்க மறுத்த நயன் ரஜினி படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

புது ரூட்
ஹீரோக்களுக்கு இணையான கதாபாத்திரத்தில் தான் நடிப்பேன், இல்லை என்றால் ஹீரோயினை மையாக கொண்ட படங்களில் மட்டுமே நடிப்பேன் என்று நயன்தாரா தற்போது அடம் பிடிப்பது இல்லை. புது ரூட்டில் சென்று கொண்டிருக்கிறார்.

நடிப்பு
நயன்தாரா ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நடிக்கிறார், பெரிய ஹீரோக்களுக்கு ஜோடியாகவும் நடிக்கிறார். அவர் இப்படி ரூட்டை மாற்றி நடிக்கத் துவங்கியுள்ளதால் சில நடிகைகளுக்கு வயித்தெரிச்சலாக உள்ளதாம்.

அனிருத்
நயன்தாரா நடிக்க வந்த புதிதிலேயே ரஜினிகாந்த் ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தார். தற்போது லேடி சூப்பர் ஸ்டாராக அவருடன் மீண்டும் ஜோடி சேர்கிறார். ரஜினி, நயன்தாரா சேர்ந்து நடிக்கும் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார், லைகா நிறுவனம் தயாரிக்கிறது.


Click it and Unblock the Notifications











